எம்மை பற்றி
”யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம் நோர்வே” 1999ம் ஆண்டு ஒஸ்லோவில் இங்குள்ள பழைய மாணவர்களால் கல்லூரி நினைவலைகளை பகிர்ந்துகொள்ளல் என்றவகையில் ஆரம்பிக்கப்பட்டது. அந்தக்காலப்பகுதியில் ஒன்றியத்தின் செயற்பாடுகள் கல்லூரியை நோக்கி ஓரளவு நகர்ந்திருந்தாலும் இலங்கையில் இடம்பெற்ற போரினால் ஒரு தேக்க நிலையிலேயே இருந்தது.
அதன்பிற்பாடு மீண்டும் 21.09.2004 முதல் கல்லூரியின் வளர்ச்சியில் நோர்வே பழைய மாணவர்களின் பங்களிப்பும் தேவை என்ற கருத்தின் அடிப்படையில் ஆர்வமுள்ளவர்களாலும், இளைப்பாறிய ஆசிரியை திருமதி சரஸ்வதி பொன்னம்பலம் அவர்களுடைய ஆலோசனையிலும், புதிய நிர்வாகத்தின் செயற்பாடுகள் ஆரம்பித்து, தனது செயற்பாடுகளை முன்னேடுத்து வருகின்றது.
எமது நோக்கம்.
அறிவாற்றல் உள்ள தமிழ் மாணவ சமுதாயத்தை உருவாக்குவது.
எமது பணி.
-
நோர்வேயில் வசிக்கும் அனைத்து பழைய மாணவர்களையும் ஒன்றுதிரட்டல். அதன்மூலம் தமது பாடசாலை நினைவலைகளை பகிர்ந்துகொள்ள களமமைத்துக் கொடுத்தல்.
-
சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் வளர்ச்சிக்கு எம்மால் முடிந்தளவு பங்களிப்பு செய்தல்.
-
சாவகச்சேரியை சூழவுள்ள ஏனைய பாடசாலைகட்கு கல்விசார்ந்த, மற்றும் ஏனைய அடிப்படைவசதிகளை அறிந்து, எம்மால் முடிந்த, வருடத்திற்கு ஒருதடவை ஒருபாடசாலை என்ற ரீதியில் உதவுதல்.
அங்கத்தவர்களுடனான எமது தகவல் தொடர்புகள் கூடுதலாக mail ஊடாகவே அமையும். எமது mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். எம்மால் அனுப்பபடுகின்ற mail களுக்கு உங்களிடமிருந்து வரும் பதிலும், ஆலோசனைகளும் தான் எம்மை ஊக்கப்படுத்தும்.
எம்மை பற்றி மேலும் அறிந்துகொள்ள எமது http://hinducollegechava.com பார்வையிடவும்.
நிர்வாகம்.
யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம் நோர்வே.