நோர்வே – யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்

ஒன்றியத்தால் செயல்படுத்தி பூரணப்படுத்தப்பட்ட செயற்திட்டங்கள்.

2017 / 2016

காணிக்கொள்வனவு

எமது பாடசாலையின் எதிர்காலதேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பாடசாலையின் நீண்ட நாள் கோரிக்கையான இலக்கம் 1 கைலாசபிள்ளை வீதி காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

காணி பற்றிய விபரம் - காணியின் அளவு 3,3 பரப்பு. ஒரு பரப்பின் கொள்வனவு விலை 13 லட்சம் இலங்கை ரூபா. காணியின் மொத்த கொள்வனவு விலை 42 லட்சத்து 80 ஆயிரம் இலங்கை ரூபா.

காணிக்கொள்வனவு பதிவுச் செலவீனம் 1 லட்சத்து 71 ஆயிரம் இலங்கை ரூபா.

காணி நுழைவு வாயில் முகப்பு, முன் மதில் அமைப்பதற்கான செலவீனம் அண்ணளவாக 5 லட்சம் இலங்கை ரூபா என எதிர்பார்க்கப்படுகின்றது.

இக் காணிக்கு “நோர்வே பழைய மாணவர் ஒன்றிய வளாகம்” “Norway Old Student Union Compound” எனப் பெயர் இடப்படும்.

எமது ஒன்றியத்தால் 2011ல் பாடசாலையின் வங்கிகணக்கில் சிற்றுண்டிச்சாலை கட்டுவதற்கு வைப்புச் செய்யப்பட்ட 10 லட்சம் இலங்கை ரூபா முற்பணத்துடன் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

2017

தொடரும் பங்களிப்புகள். மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்

தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில் ”இணைத்து மாதாந்தம் கல்வி செலவினத்திற்கு தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது.

  1. 2013 ம் ஆண்டு முதல் யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 5மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம். இவர்களில் இருவர் A/Lக்கு பின் கல்வியை தொடராதபடியால் உதவி Aug. 2017ல் நிறுத்தப்பட்டது. இலங்கை ரூபா 112 500.00 இவ்வருடம் வழங்கப்பட்டது.
  2. 01.06.2015 முதல் கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 22 மாணவர்ககளின் கல்விக்கான பண உதவித்திட்டம். இவர்களில் ஜவர் கல்வியை தொடராதபடியால் உதவி July. 2017ல் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஜவர் இணைக்கப்பட்டுள்னர். இலங்கை ரூபா 660 000.00 இவ்வருடம் வழங்கப்பட்டது.
  3. 01.06.2016 முதல் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் “கற்றலுக்கு கைகொடுப்போம் ”திட்டத்தின் கீழ் உள்ள 11 மாணவர்ககளின் கல்விக்கான பண உதவித்திட்டம். இவர்களில் இருவர் கல்வியை தொடராதபடியால் உதவி நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு பதிலாக இருவர் இணைக்கப்பட்டுள்னர். இலங்கை ரூபா 330 000.00 இவ்வருடம் வழங்கப்பட்டது.
  4. இவர்களில் ஒரு மாணவி A/L பரீச்சை பெறுபேறுகளுக்காக காத்திருக்கின்றார். அவர் உயர்கல்வி தொடரும் பச்சத்தில் அவருக்கு உதவி தொடரும்.

2016

“மாணவர்களின் கல்விக்கான பண உதவி திட்டம்”

சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் கற்றலுக்கு கைகொடுப்போம்திட்டத்தின் கீழ் உள்ள தாய் தந்தையரை இழந்தோர், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்இணைத்து மாதாந்தம் கல்வி செலவினத்துக்கு 2500 இலங்கை ரூபாவை 2016 August முதல் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் 11 மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஒன்றியம் எற்பாடு செய்து கொடுத்துள்ளது. இலங்கை ரூபா 137 500.00 (5 மாதங்களுக்கு)

தொடரும் பங்களிப்புகள்.

மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்

  1. 2013ம் ஆண்டு முதல் யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 5 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம். இலங்கை ரூபா 150 000.00 வருடம். இத்திட்டத்தில் 1 மாணவர் இந்த வருடத்திலிருந்து இனைக்கப்பட்டுள்ளார்.
  2. 01. 06. 2015 முதல் கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 22 மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவித்திட்டம். இலங்கை ரூபா 660 000.00 வருடம்.

மாணவர்களுக்கு சீர்உடை, கல்விக்கு தேவையான உபகரணங்கள் வழங்கியது. இலங்கை ரூபா 44 000.00

2015

பங்களிப்பு 1. மானவர்களின் கல்விக்கான பண உதவி திட்டத்தில் - கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் இலங்கைக்கு வெளியில் வசிக்கும் உதவிசெய்ய கூடியவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான எற்பாடுகளை செயற்படுத்திகொடுத்துள்ளது. இத்திட்டத்தின்மூலம் 22 மாணவர்களுக்கு June 2015 முதல், மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கு Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை சேர்ந்த 17 குடும்பத்தினர் இந்த மானவர்களின் கல்விக்கான பண உதவிகளை எம் ஊடாக வழங்கி வருகின்றனர்.

இலங்கை ரூபா 385 000.00 (7 மாதங்களுக்கு)

பங்களிப்பு 2. யா / சாவகச்சேரி மகளிர் கல்லூரிக்கு நுழைவு வாயில் அமைத்தல். இலங்கை ரூபா 800 000.00

தொடரும் பங்களிப்புகள்.

  1. 01.11.2013 முதல் யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு உதவியாளர்கள். இலங்கை ரூபா 120 000.00 வருடம்.

2. மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்

2013ம் ஆண்டு முதல் Norwayயிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 3 குடும்பத்தினர் கச்சாய் பகுதியிலுள்ள 4 மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்துவருகின்றனர். மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது. இலங்கை ரூபா 120 000.00 வருடம். இத்திட்டத்திலிருந்த 4 மாணவர்களுக்கான உதவி சென்ற வருடத்துடன் நிறைவடைந்துள்ளது.

2014

2014ம் ஆண்டு திட்டத்தின் கீழ் இரண்டு பாடசாலைகள் உதவிபெற்றன.

பங்களிப்பு 1. யா/மந்துவில் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் வித்தியாலயத்திற்கு TOSHIBA E-Studio 2007 நிழற்பட இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா – 155 680.00

பங்களிப்பு 2. யா/மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயத்திற்கு TOSHIBA E-Studio 2007 நிழற்பட இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா – 155 680.00

இரு பாடசாலைகளுக்கும் ஒன்றியத்தின் தலைவர், கல்வி அதிகாரிகளுடன் நேரடியாக சென்று இவ் அன்பளிப்பை வளங்கியதுடன் மாணவர்களின், பாடசாலைகளின் நிலமைகளையும் நேரில் தெரிந்துகொண்டனர்.

தொடரும் பங்களிப்புகள்.

  1. 01.11.2013 முதல் யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு உதவியாளர்கள். இலங்கை ரூபா 120 000.00 வருடம்.

2. மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

2013ம் ஆண்டு முதல் Norwayயிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினர் கச்சாய் பகுதியிலுள்ள 8 மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்துவருகின்றனர். மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது. இலங்கை ரூபா 240 000.00 வருடம்.

2013

1) யா/கச்சாய் அ. த. க. பாடசாலை கொடிகாமத்துக்கு ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் மற்றும் பூங்கா அமைத்தல். இலங்கை ரூபா 300 000.00

  1. யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி 01.11.2013 முதல் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு உதவியாளர்கள் இரு மாணவர்கள் நியமனம் செய்தனர். கல்லூரியில் உயர்தரபரீட்சை எழுதி பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் இம் மாணவர்களுக்கு அவர்களுடைய எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மாதாந்தம் தலா ஜந்தாயிரம் ரூபா ஊதியமாக வழங்கபடுகின்றது. இத்திட்டத்திற்கு 2011ல் சிற்றுண்டிச்சாலைக்கு வைப்பு செய்யப்பட்ட பணத்திலிருந்து ஊதியம் வழங்கப்பட்டுவருகின்றது. இலங்கை ரூபா 120 000.00 வருடம்.

3. மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்

இலங்கையில் நீடித்த யுத்ததின் காரணமாக தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டினுள் தவிக்கின்ற, கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களுக்கும், எமது ஒன்றியம் தென்மராச்சியில் உள்ள சில பாடசாலைகளின் அதிபர்களின் / நிர்வாகத்தினரின் உதவியுடன் மாணவர்களை தெரிவு செய்து, இலங்கைக்கு வெளியில் வசிக்கும் உதவிமனப்பான்மையுள்ள குடும்பத்தினர்களிடம் / நபர்களிடம், இந்த மாணவர்களின் கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான எற்பாடுகளை செய்து கொடுக்கின்றோம்.

இத்திட்டத்திற்கு எமது ஒன்றியம் இம் மாணவர்களுக்கும் உதவி செய்யும் குடும்பத்தினருக்கும் / நபர்களுக்கும் இடையில் ஒரு ஆரம்பகட்ட தொடர்பாளராக மட்டுமே செயல்படுகின்றது.
2013ம் ஆண்டு முதல் Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினர் 8 மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்துவருகின்றனர். இவர்கள் தங்களின் வசதிகளுக்கு ஏற்பவும், மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்பவும் உதவிகளை செய்துவருவதுடன், அவர்களிற்கிடையிலான தொடர்புகளையும் தாங்களே பேணிவருகின்றனர். மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது. இலங்கை ரூபா 240 000.00 வருடம்.

2012

எம்முடன் எவரும் உதவி கேட்டு தொடர்பு கொள்ளாத கரணத்தால் எம்மால் எந்த திட்டமும் செயற்படுத்தமுடியவில்லை என மனம் வருந்துகின்றோம்.

உங்களுக்கு தெரிந்த பாடசாலைகளுக்கு அல்லது மாணவர்களுக்கு உதவி தேவையிருப்பின் எம்முடன் தொடர்புகொள்ளும்படி தெரிவிற்க்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

2011

1) இந்துக்கல்லூரிக்கு சிற்றுண்டிச்சாலை கட்ட மிகுதி நிதியாக வங்கியில் வைப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 750 000.00 மொத்தமாக வைப்பு செய்யப்பட்ட தொகை இலங்கை ரூபா 825 000.00

சிற்றுண்டிச்சாலையை பல காரணங்களால் எம்மால் பூர்த்திசெய்ய முடியவில்லை.

2) கொடிகாமம் திருநாவுக்கரசு மாகவித்தியாலத்துக்கு டுப்ளோ போட்டோ பிரதி இயந்திரம் வாங்கி கொடுக்கப்பட்டது. இத்திட்டதால் சுற்றியுள்ள 7 பாடசாலைகளும் பயனடைகின்றது. அப்பாடசாலைகள்

1) யா/ உசன் இராமநாதன் மாக வித்தியாலயம். 2) யா/ விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயம். 3) யா/ கெற்பேலி அ.த.க. பாடசாலை. 4) யா/ போக்கட்டி றோ.க.த.க. பாடசாலை. 5) யா/ போக்கட்டி அ.த.க. பாடசாலை. 6) யா/ மிருசுவில் றோ.க.த.க. பாடசாலை. 7) யா/ கச்சாய் அ.த.க. பாடசாலை.

மிகுதிப்பணத்தில் மதில் கட்டப்பட்டது. இலங்கை ரூபா 500 000.00

2010

1) மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயம் - நிழற்படஇயந்திரம்(Kopimaskin) அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த 50 மாணவர்களுக்கான சப்பாத்துகள் (50 par sko). இலங்கை ரூபா 185 000.00

2) இந்துக்கல்லூரிக்கு சிற்றுண்டிச்சாலை கட்ட(கிட்டத்தட்ட 10லட்சம்) ஆரம்ப நிதியாக வங்கியில் வைப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 75 000.00

2009

மீசாலை கமலாம்பிகை வித்தியாலய பின்புற மதில் கட்டியமை. இலங்கை ரூபா 251 875.00

2008

சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆரம்பபாடசாலைக்கு நிழற்பட இயந்திரம் (Kopimaskin), printer, மின்பொருள், மின்இணைப்பு வேலை. இலங்கை ரூபா 241 500.00

2007

நாட்டு நிலமை காரணமாக எந்த திட்டமும் செயற்படுத்தமுடியவில்லை மனம் வருந்துகின்றோம்.

2006

நுணாவில் கிழக்கு அமிர்தாம்பிகை வித்தியாலயம் - நூலககட்டிடம், நூலகஉபகரணங்கள் - நூல்கள்

இலங்கை ரூபா 130 000.00

2005

மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம் முழுவதற்குமான மின் இணைப்பு செய்தமை.

இலங்கை ரூபா 70 000.00

2004

சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு சுவர்ணி நகைமாடம் ஆதரவில் ஒன்றியத்தினூடாக நிழற்பட இயந்திரம்(Kopimaskin) அன்பளிப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 188 875.00