2013 – யா/ கச்சாய் அ. த. க. பாடசாலை.

யா/ கச்சாய் அ. த. க. பாடசாலை  ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் மற்றும் பூங்கா அமைக்கப்பட்டது. தென்மராட்சி வலயகல்வி பொறுப்பாளர் திரு. கிருஷ்ணகுமார் அவர்களால் திறந்துவைககப்பட்டது. இலங்கை ரூபா 300 000.  

“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஆரம்பம்

“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” வறுமை கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தை” 2013 ல்  நோர்வே, மற்றும் கனடாவில் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினரின் ஆதரவுடன் கச்சாய் பகுதியிலுள்ள 8 மாணவர்களுடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. திட்டம் உருவானவிதம். 2010 ம் ஆண்டு முதல் நோர்வே, மற்றும் கனடாவில் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட இத்திட்டம், இத்திட்டத்தால் பல மாணவர்கள் பயன் பெறவேண்டும் என்ற வேண்டுகோள்களின் படி...

2013 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

இலங்கையில் நீடித்த யுத்ததின் காரணமாக தாய் தந்தையரை இழந்த  மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டினுள் தவிக்கின்ற, கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களுக்கும், எமது  ஒன்றியம் தென்மராட்சியில் உள்ள சில பாடசாலைகளின் அதிபர்களின் / நிர்வாகத்தினரின் உதவியுடன் மாணவர்களை தெரிவு செய்து, புலம் பெயர்ந்து வாழும் உதவிமனப்பான்மையுள்ள குடும்பத்தினர்களிடம் / நபர்களிடம்  இந்த மாணவர்களின் கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றோம். 2013 ம் ஆண்டு முதல் Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினர் 8 மாணவர்களின்...

2012 – எம்முடன் எவரும் உதவி கேட்டு தொடர்பு கொள்ளாத காரணத்தால்

எம்முடன் எவரும் உதவி கேட்டு தொடர்பு கொள்ளாத காரணத்தால் எம்மால் எந்த திட்டமும் செயற்படுத்தமுடியவில்லை என மனம் வருந்துகின்றோம்.

2011 – யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி

சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு சிற்றுண்டிச்சாலை கட்ட மிகுதி நிதியாக வங்கியில் வைப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 750 000. மொத்தமாக வைப்பு செய்யப்பட்ட தொகை இலங்கை ரூபா 825 000. சிற்றுண்டிச்சாலையை பல காரணங்களால் எம்மால் பூர்த்திசெய்ய முடியவில்லை.

2011 – கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலம்.

கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலத்துக்கு டுப்ளோ போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டது. இத்திட்டதால் திருநாவுக்கரசு மகாவித்தியாலயத்தை சுற்றியுள்ள 7 பாடசாலைகள் பயனடைகின்றது. அப்பாடசாலைகள் 1) யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலயம். 2) யா/ விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயம். 3) யா/ கெற்பேலி அ.த.க. பாடசாலை. 4) யா/ போக்கட்டி றோ.க.த.க. பாடசாலை. 5) யா/ போக்கட்டி அ.த.க. பாடசாலை. 6) யா/ மிருசுவில் றோ.க.த.க. பாடசாலை. 7) யா/ கச்சாய் அ.த.க. பாடசாலை. மிகுதிப்பணத்தில் மதில் கட்டப்பட்டது.  இலங்கை ரூபா 500 000

கலைமாலை 2011

எமது ஒன்றியத்தின் “கலைமாலை 2011” 07. 05. 2011 சனிக்கிழமை மாலை 18:00 மணி Grorud Samfunn hus நடக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

2010 சாவகச்சேரி இந்துக்கல்லூரி.

இந்துக்கல்லூரிக்கு சிற்றுண்டிச்சாலை கட்ட  ஆரம்ப நிதியாக வங்கியில் வைப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 75 000 திட்ட மதிப்பீடு கிட்டத்தட்ட 10 லட்சம்.

2010 – மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயம்.

மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயம் – நிழற்படஇயந்திரம் (Kopimaskin) அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த 50 மாணவர்களுக்கான சப்பாத்துகள் (50 par sko) என்பன அன்பளிப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 185 000  

2009 – மீசாலை கமலாம்பிகை வித்தியாலயம்.

மீசாலை கமலாம்பிகை வித்தியாலய பின்புற மதில் மாணவர்களின் பாதுகாப்பிற்கும், கற்றலுக்கு இடையூறின்றி இருப்பதற்காகவும் கட்டப்பட்டது. இலங்கை ரூபா 251 875