“தொடரும் பங்களிப்புகள்” Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 3 குடும்பத்தினர் கச்சாய் பகுதியிலுள்ள 4 மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்துவருகின்றனர். மாதம் தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. 120 000 வருடம். இத்திட்டத்திலிருந்த 4 மாணவர்களுக்கான உதவி சென்ற வருடத்துடன் நிறைவடைந்துள்ளது. இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
Year: 2015
2015 யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.
தொடரும் பங்களிப்புகள். யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர்களுக்கான வேதனமாக இலங்கை ரூபா 120 000 வருடம் வழங்கப்பட்டது. இத்திட்டம் 01.11.2013 முதல் நடைமுறையில் உள்ளது.
2015 யா / சாவகச்சேரி மகளிர் கல்லூரி.
தென்மராச்சி வலய கல்விப்பணிப்பாளர், மற்றும் மகளிர் கல்லூரியின் வேண்டுகோளுக்கினங்க “யா / சாவகச்சேரி மகளிர் கல்லூரிக்கு” நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. இலங்கை ரூபா 800 000.
2015 – கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம்.
“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில் – கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 22 மாணவர்களுக்கு June 2015 முதல் மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கு Norway...
2017 / 2016 காணிக்கொள்வனவு
எமது பாடசாலையின் எதிர்காலதேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பாடசாலையின் நீண்ட நாள் கோரிக்கையான “இலக்கம் 1 கைலாசபிள்ளை வீதி” காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
காணி பற்றிய விபரம் - காணியின் அளவு 3,3 பரப்பு. ஒரு பரப்பின் கொள்வனவு விலை 13 லட்சம் இலங்கை ரூபா. காணியின் மொத்த கொள்வனவு விலை 42 லட்சத்து 80 ஆயிரம் இலங்கை ரூபா.
காணிக்கொள்வனவு பதிவுச் செலவீனம் 1 லட்சத்து 71 ஆயிரம் இலங்கை ரூபா.