யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பௌதீக வளர்ச்சிக்காக தற்போதைய அதிபர் திரு. ந. சர்வேஸ்வரன் அவர்கள் முன்னெடுத்து வரும் முயற்சிகள் வரலாற்றுச் சிறப்புடையவை. கல்லூரியை நவீனப்படுத்தும் நோக்கில் நீண்டகாலத் திட்டம் உருவாக்கி, உலகம் முழுவதும் உள்ள பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டுள்ளார். மாணவர்கள் தாமே நிர்வாகத்தில் பங்கேற்கும் ஜனநாயக முறையுடனும் திட்டம் முன்னேறியுள்ளது. இத்திட்டம் அரசின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பழைய மாணவர்களின் முழு ஆதரவுடன் 30 நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட வகுப்பறைகள் அடங்கிய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா ஏப்ரல் 9ஆம்...
கல்வி மேம்பாட்டு முன்னமர்வுகள்
கல்வி மேம்பாட்டு முன்னமர்வுகள் – அறிக்கை தொடக்ககாலம்:- 17.01.2026 (சனிக்கிழமை) நடைபெற்ற இடம் : கிளி/முட்கொம்பன் மகாவித்தியாலயம் திட்டத்தின் தன்மை : முக்கிய தேசிய பரீட்சைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான கல்வி மேம்பாட்டு முன்னமர்வுகள் 1. முன்னமர்வுகளில் உள்ளடக்கப்பட்ட வகுப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடு வகுப்பு ஒதுக்கப்பட்ட நிதி (இலங்கை ரூபாய்) க.பொ.த சாதாரண தரம் 160,000 க.பொ.த உயர்தரம் 50,000 5ஆம் தர புலமைத்தேர்வு 25,000 மொத்தம் 235,000 2. திட்டத்தின் நடைமுறை மேலே குறிப்பிடப்பட்ட முக்கிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான முன்னமர்வுகள், கடந்த...
மாபெரும் கட்டிட நிர்மாணம்-2026
மூன்று மாடிகள் கொண்ட முற்பது வகுப்பறைகள் சாவகச்சேரி இந்துக் கல்லூரி கடந்த 120 ஆண்டுகளாக வட இலங்கையில் உயர்தரக் கல்வியை வழங்கி வரும் ஒரு தொன்மையான மற்றும் தலைசிறந்த கல்வி நிறுவனமாக விளங்குகிறது. பல துறைகளில் மதிப்புக்குரிய சாதனைகளைப் பதிவுசெய்த எண்ணற்ற பழைய மாணவர்களை உருவாக்கி, அவர்களின் பெருமைக்குரிய பங்களிப்புகளின் மூலம் இந்நிறுவனத்தின் கீர்த்தி உலகளாவிய அளவில் உயர்ந்து வருகிறது. கல்லூரியின் கல்விச் செயல்திறன் தொடர்ந்தும் மேம்படுவதற்காக பௌதீக வசதிகளின் விரிவாக்கமும் நவீனமயமாதலும் அவசியம் என்பதை கருத்திற்கொண்டு, அதிபரின் தொலைநோக்கு முனைப்பின் அடிப்படையில் மூன்று...
புதிதாக இணையும் கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி
எமது ஒன்றியத்தால் முன்னெடுத்துவரும் கல்விக்கு கைகொடுப்போம் திட்டத்தில் இவ்வாண்டிலும் புதிதாக ஆறு(6 )மாணவர்கள் உதவி பெறத்தெரிவாகியுள்ளனர். இவர்கள் கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.பல வருடங்களாக ஒன்றியத்தின் உதவித்திட்டத்தால் பயன் அடைந்துவரும் பாடசாலைகளின் வரிசையில் இவ்வாண்டு புதிதாக இணைக்கப்படும் கல்லூரி இது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு August.2025 ல் இருந்து நடைமுறைப்படுத்தப்படும். ஒன்றியத்தின் வேர்களாக, அதன் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக பலர் திகழ்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றியத்தின் மனமார்ந்த நன்றிகள்.
2024 – G.C.E.(O/L) பெறுபேறுகள்
Vidathathlpalai Kamalasini M.V Jeyarasa Nirusan – 1A,6B,1C,1S Kilinochchi Hindu Colloge. Jeyasri Thivia – 8A,1B Suthakar Isaiyarasan – 7A,1B,1 Kaithady Vikneswara Suthakaran Magelnila – 9A Vidathathlpalai Kamalasini M.V 5 ம் வகுப்பு புலமைப்பரீட்சை பெறுபேறுகள் Sivakaran Mirnika 143 புள்ளிகள் வெட்டுப்புள்ளி (139)
2023 – கிளி/பூநகரி ஶ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம் – நிதி அன்பளிப்பு
நிதி அன்பளிப்பு கிளி / பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் இருபது மாணவர்களுக்கான பாதணிகள் கொள்வனவுக்கான நிதி அன்பளிப்புச் செய்யப்பட்டது. இவ்விரு பயனுள்ள பணிகளையும் செய்து, எம் சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் எமது இளையோர் அமைப்பினரின் பணிகள் தொடர எம் பாராட்டுகள்!
2024 – 5 ம் வகுப்பு புலமைப்பரீட்சை பெறுபேறுகள்
Vidathathlpalai Kamalasini M.V 5 ம் வகுப்பு புலமைப்பரீட்சை பெறுபேறுகள் Sivakaran Mirnika 143 புள்ளிகள் வெட்டுப்புள்ளி (139)
2023 – யா / கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயம் – குடிநீர் சுத்திகரிப்புச் சாதன மீளியக்கம்
குடிநீர் சுத்திகரிப்புச் சாதன மீளியக்கம் யா / கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு ஏற்கனவே இளையோர் அமைப்பினரால் வழங்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்புச் சாதனமானது, மாணவர்களின் குடிநீர்த் தேவையைத் தீர்த்து வந்தது. சில ஆண்டுகளின் பின் பழுதடைந்த சுத்திகரிப்பு இயந்திரமானது, சீர்செய்யப்பட்டு மீள்பாவனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.






