கிளி/முக்கொம்பன் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 5 மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில், எமது ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் மற்றுமொரு கல்வி செயலமர்வு ஆடி மாதத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த செயலமர்வு மாணவர்களின் புலமைப்பரிசில் தேர்வுத் தயாரிப்பை வலுப்படுத்துவதோடு, அவர்களின் அறிவு, சிந்தனைத்திறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் அமைந்திருந்தது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக தொடர்ச்சியான இவ்வாறான முயற்சிகளை முன்னெடுத்து வருவதில் எமது ஒன்றியம் பெருமை கொள்கிறது. இந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்த ஆசிரியர்கள், வளவாளர்கள் மற்றும்...
