கிளி/முக்கொம்பன் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 5 மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில், எமது ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் மற்றுமொரு கல்வி செயலமர்வு ஆடி மாதத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த செயலமர்வு மாணவர்களின் புலமைப்பரிசில் தேர்வுத் தயாரிப்பை வலுப்படுத்துவதோடு, அவர்களின் அறிவு, சிந்தனைத்திறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் அமைந்திருந்தது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக தொடர்ச்சியான இவ்வாறான முயற்சிகளை முன்னெடுத்து வருவதில் எமது ஒன்றியம் பெருமை கொள்கிறது. இந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்த ஆசிரியர்கள், வளவாளர்கள் மற்றும்...
Year: 2026
கற்றலுக்கு கைகொடுக்கும் திட்டம் – புதிய மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு
எமது தாய்க்கல்லூரியில் இருந்து கற்றலுக்குகைகொடுக்கும்திட்டத்திற்காக புதிதாக 10 மாணவர்கள் உதவி கோரி விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர். அனைத்து விண்ணப்பங்களும் நிர்வாகத்தால் விரிவாக பரிசீலிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், தகுதி பெற்ற மாணவர்களுக்கு உரிய கல்வி உதவித் தொகை May மாதம் முதல் வழங்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் அவர்களின் உயர்கல்வி இலக்குகளை அடைவதற்கும் உறுதுணையாக இருக்கும் என நிர்வாகம் நம்புகிறது. நன்றி,
ஒற்றுமையே வலிமை!
யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பௌதீக வளர்ச்சிக்காக தற்போதைய அதிபர் திரு. ந. சர்வேஸ்வரன் அவர்கள் முன்னெடுத்து வரும் முயற்சிகள் வரலாற்றுச் சிறப்புடையவை. கல்லூரியை நவீனப்படுத்தும் நோக்கில் நீண்டகாலத் திட்டம் உருவாக்கி, உலகம் முழுவதும் உள்ள பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டுள்ளார். மாணவர்கள் தாமே நிர்வாகத்தில் பங்கேற்கும் ஜனநாயக முறையுடனும் திட்டம் முன்னேறியுள்ளது. இத்திட்டம் அரசின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பழைய மாணவர்களின் முழு ஆதரவுடன் 30 நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட வகுப்பறைகள் அடங்கிய...
கல்வி மேம்பாட்டு முன்னமர்வுகள்
கல்வி மேம்பாட்டு முன்னமர்வுகள் – அறிக்கை தொடக்ககாலம்:- 17.01.2026 (சனிக்கிழமை) நடைபெற்ற இடம் : கிளி/முட்கொம்பன் மகாவித்தியாலயம் திட்டத்தின் தன்மை : முக்கிய தேசிய பரீட்சைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான கல்வி மேம்பாட்டு முன்னமர்வுகள் 1. முன்னமர்வுகளில் உள்ளடக்கப்பட்ட வகுப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடு வகுப்பு ஒதுக்கப்பட்ட நிதி (இலங்கை ரூபாய்) க.பொ.த சாதாரண தரம் 160,000 க.பொ.த உயர்தரம் 50,000 5ஆம் தர புலமைத்தேர்வு 25,000 மொத்தம் 235,000 2. திட்டத்தின் நடைமுறை மேலே குறிப்பிடப்பட்ட முக்கிய...


