“தொடரும் பங்களிப்புகள்” மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.
தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது
1. யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 5 மாணவர்களுக்கு 112 500 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இவர்களில் இருவர் A/L க்கு பின் கல்வியை தொடராதபடியால் உதவி Aug. 2017ல் நிறுத்தப்பட்டது. இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
2. கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 22 மாணவர்களுக்கு 660 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இவர்களில் ஐவர் கல்வியை தொடராதபடியால் உதவி July. 2017ல் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஐவர் இணைக்கப்பட்டுள்ளனர். இத்திட்டம் 2015 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது
3. சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் 11 மாணவர்களுக்கு 330 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இவர்களில் இருவர் கல்வியை தொடராதபடியால் உதவி நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு பதிலாக இருவர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு மாணவி A/L பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருக்கின்றார். அவர் உயர்கல்வி தொடரும் பட்சத்தில் அவருக்கு உதவி தொடரும். இத்திட்டம் 2016 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.