காணிக்கொள்வனவு
எமது பாடசாலையின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பாடசாலையின் நீண்டநாள் கோரிக்கையான“இலக்கம் 1 கைலாசபிள்ளை வீதி”யில் அமைந்துள்ள காணி ஒன்றியத்தின் முழுமையான பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இக் காணியில் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட ஒரு பெரிய தொகையில் கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றது.
காணி பற்றிய விபரம் – காணியின் அளவு 3,3 பரப்பு. ஒரு பரப்பின் கொள்வனவு விலை
13 லட்சம் இலங்கை ரூபா. காணியின் விலை 42 லட்சத்து 80 ஆயிரம் இலங்கை ரூபா.
காணிக்கொள்வனவு பதிவுச் செலவீனம் 1 லட்சத்து 71 ஆயிரம் இலங்கை ரூபா.
காணி நுழைவு வாயில் முகப்பு, முன் மதில் அமைப்பதற்கான செலவீனம் அண்ணளவாக 6 லட்சம் இலங்கை ரூபா என எதிர்பார்க்கப்படுகின்றது.
இக் காணிக்கு “நோர்வே பழைய மாணவர் ஒன்றிய வளாகம்” “Norway Old Student Union Compound” எனப் பெயர் இடப்படும்.
எமது ஒன்றியத்தால் 2011ல் பாடசாலையின் வங்கிகணக்கில் சிற்றுண்டிச்சாலை கட்டுவதற்கு வைப்புச் செய்யப்பட்ட 10 லட்சம் இலங்கை ரூபா முற்பணத்துடன் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.
மொத்த கொள்வனவு விலை 50 லட்சத்து 51 ஆயிரம் இலங்கை ரூபா.