2018 வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவு

2018 வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவு

30 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு.

சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பழைய மாணவன் வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவாக, நகுலேஸ்வரனின் நோர்வே வாழ் சகோதரர் திரு. வே. சற்குணம் அவர்களால் – நோர்வே – இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடன், நகுலேஸ்வரன் கல்வி பயின்ற

சாவகச்சேரி இந்துக்கல்லூரி,

மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம்,

கிளி. கண்டாவளை மகா வித்தியாலயம்

ஆகிய பாடசாலைகளின் 30 வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை 24 / 5 அன்று சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் அதிபர் திரு. ந. சர்வேஸ்வரன், தலைமையில் வழங்கப்பட்டது. அன்பளிப்பின் பெறுமதி சுமார் 5 லட்சம் இலங்கை ரூபா.