2019 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

2019 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

தொடரும் பங்களிப்புகள்.  மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்

தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது

  1. யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 1 மாணவனுக்கு 30 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
  2. கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 19 மாணவர்களுக்கு 570 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. 3 மாணவர்கள் O/L க்கு பின் கல்வியை தொடராதபடியால் உதவி நிறுத்தப்பட்டது. இத்திட்டம் 2015 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
  3. யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் மாணவர்கள் கல்வியை தொடராதபடியால் உதவி நிறுத்தப்பட்டது.
  4. யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பல்கலைக்கழக மாணவியின் கல்விக்கு 60 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு 5000 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது. இத்திட்டம் 2016 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
  5. யா/கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 12 மாணவர்களுக்கு 360 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. 3 மாணவர்கள் இந்த வருடத்திலிருந்து இணைக்கப்பட்டுள்ளார். இத்திட்டம் 2018 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.