கொரோனா வைரஸ் உலகத்தின் இயல்பு நிலையில் பல பாரியமாற்றங்களையும், உயிர் இழப்புகளையும் உலகின் மூலை மூடுக்குகள் எல்லாம் ஏற்படுத்தியுள்ளது. இன்று மனித இனம், இன, மத, பேதம் கடந்து இந்த நோயிலிருந்து மீண்டு வருவதற்கு தன்னாலான எல்லா சேவைகளையும், உதவிகளையும் செய்து வருகின்றது.
எமது தாயகத்தில் அன்றாட தொழில் வருமானம் மூலம் வாழும் பலரின் குடும்பங்கள் வருமானமின்றி அன்றாடம் உணவுக்கு கஸ்டப்படுகின்ற நிலையில் எமது மாணவர்களின் கல்விக்கான பணஉதவித்திட்டத்தின் மூலம் உதவி பெறும் மாணவர்களின் குடும்பத்திற்கும், அதே நிலையிலுள்ள அதே பாடசாலையில் கல்விகற்கும் ஏனைய பல வறிய மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.
- கிளிநொச்சி இந்துக்கல்லூரியை சேர்ந்த 12 மாணவர்களின் குடும்பத்தினருக்கு 30 000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் ஒன்றியத்தின் சார்பில் (16/4/2020) அதிபர், ஆசிரியர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
- கிளி/ பூநகரி ஸ்ரீ விக்கினேஸ்வரா வித்தியாலயத்தை சேர்ந்த 119 மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஒன்றியத்தின் சார்பில் 150 500 ரூபாவும், கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் சார்பில் 50 000 ரூபாவும் சேர்த்து மொத்தமாக 200 500 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் (16 & 19 /4/2020) அதிபர், ஆசிரியர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
- யா/ கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயத்தை சேர்ந்த 94 மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஒன்றியத்தின் சார்பில் 45 000 ரூபாவும், ஒன்றியத்தின் இளையோர் அமைப்பின் சார்பில் 45 000 ரூபாவும், கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் சார்பில் 67 460 ரூபாவும் சேர்த்து மொத்தமாக 157 460 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் (19/4/2020) அதிபர், ஆசிரியர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
- சா/ இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம் நோர்வே அனுசரணயுடன். விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியை அமரர் செ. முத்துப்பிள்ளை, மற்றும் அவரின் மகனும் வித்தியாலயத்தின் பழைய மாணவருமான அமரர், C.V.விவேகானந்தன் (சிரேஷ்ட சட்டத்தரணி) அவர்களின் நினைவாக குடும்பத்தினரால் 50 மாணவர்களின் குடும்பத்தினருக்கு 125 000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் 13/5/20 அதிபர், ஆசிரியர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.