ஒன்றியத்தின் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஆறாவது (6) பாடசாலைக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் இலங்கைக்கு வெளியில் வசிக்கும் உதவிசெய்யகூடியவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளைவழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்துள்ளது.
24.07.20 விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் அதிபர் திரு. ரா. நாகேந்திரன் மற்றும் கல்வி அதிகாரி செல்வி. ராஜதுரை அபிராமி தலைமையில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் முன்னிலையில் இத் திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் 10 மாணவர்களுக்கு ஆடி (July) 2020 முதல், மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது.
Leave a Reply