எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஏழாவது(7) பாடசாலைக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது” – கைதடி நுணாவில் அ.த.க பாடசாலையின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 5 மாணவர்களுக்கு சித்திரை 2021மாதம் முதல், மாதம் தலா ரூபா 2500 வழங்கப்படுகின்றது. 112 500 இலங்கை ரூபா வழங்கப்பட்டது.