கைதடி நுணாவில் அ.த.க பாடசாலையில் தாய், தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர்/பாதுகாவலர் இருந்தும் வறுமைக்கோட்டினுள் தவிக்கின்ற, கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை, எமது ஒன்றியம் புலம்பெயர்ந்து வாழும் நலன்விரும்பிகளின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பணஉதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்தி கொடுத்துள்ளது.
பாடசாலை அதிபர் திரு. அ. தங்கவேலு அவர்களின் தலைமையில், பொறுப்பாசிரியர் திருமதி. க. ஸர்மினி, மாணவர்கள், பெற்றோர் முன்னிலையில் இத் திட்டம் 24. 04. 2021 ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் ஐந்து (5) மாணவர்களுக்கு சித்திரை மாதம் (April) 2021 முதல், மாதம் தாலா ரூபா 2500 வழங்கப்படுகின்றது.
இத்திட்டத்தில் டென்மார்க்கில் வசிக்கும் புலம்பெயர் தமிழ்க்குடும்பம்
தாமாக முன்வந்தது பங்களிப்பு வழங்குவது இத்திட்டத்திற்கு கிடைக்கும் இன்னுமொரு அங்கிகாரம் ஆகும்.
இத்திட்டத்திற்கு பங்களிப்பு வழங்கும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் ஒன்றியத்தின் சார்பில் நன்றிகள்