ஒன்றியத்திக்கு கிடைக்கப்பெற்ற உதவிக்கோரிக்கைகள்.
- – யா/ கைதடி சேதுகாவலர் வித்தியாலயம் குடிநீர் வடிகட்டி வழங்கும் இயந்திர தேவைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கைதடி பகுதி நீர் உப்பு செறிவு கூடியது என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்த ஒன்றியம் முடிவு எடுத்துள்ளது. இதற்க்கான மதிப்பீட்டு விலையை பாடசாலையிடமிருந்து ஒன்றியம் கோரியுள்ளது.
2. – 2013 ல் ஒன்றியத்தால் நிறைவேற்றப்பட்ட யா/ கச்சாய் அ. த. க. பாடசாலை ஆரம்ப பிரிவுமாணவர்களுக்கான விளையாட்டு மைதானத்தை புனர் அமைத்து தரும்படி பாடசாலை நிர்வாகத்தினர் கோரியுள்ளனர். புனர் அமைப்பதற்க்கு தேவையான தகவல்களையும், மதிப்பீட்டு விலையை ஒன்றியம் கோரியுள்ளது. இத்தகவல்கள் கிடைக்கப்பெற்ற பின் ஒன்றியம் தனது முடிவை எடுக்கும்.
3. – கிளி/ விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயம், பாடசாலையின் 4 தேவைகளை ஒன்றியத்திக்கு அனுப்பியுள்ளனர். ஒன்றியம் அத்திட்டங்களுக்கான மதிப்பீட்டு விலையை கோரியுள்ளது. அத்திட்டங்களுக்கான மதிப்பீட்டு விலை கிடைக்கப்பேற்றதும், அவர்களின் ஒரு தேவையை நிறைவேற்றிக்கொடுக்க ஒன்றியம் முடிவு எடுத்துள்ளது.