2021ல் “தொடரும் பங்களிப்புகள்”
தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது.
- யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 1 மாணவனுக்கு 30 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
- கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 21 மாணவர்களுக்கு 630 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டம் 2015 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
- பல்கலைக்கழக மாணவியின் கல்விக்கு 60 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு 5000 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது. இத்திட்டம் 2016 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
- யா/கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 12 மாணவர்களுக்கு 360 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டம் 2018 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
- கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் 12 மாணவர்களுக்கு 360 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டம் 2019 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
- 2021ல் க. பொ. த. உயர்தரப் பரிட்சையிலும், க. பொ. த. சாதாரணதரப் பரீட்சையிலும் சித்திபெற்ற மாணவர்களுக்கு அன்பளிப்பாக 330 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது.