எமது தாய் பாடசாலையான யா/சா.இந்துக்கல்லூரியில் நவீன சிற்பி அமரர் வெற்றிவேலு ( முன்னைநாள் அதிபர்)அவர்களின் நூற்றாண்டு விழா 30.04.2022 ல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் எமது ஒன்றியம் சார்பாக திரு.ப.சுதர்சன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
அவ்வேளை எமது ஒன்றியத்தின் அனுசரணையோடு உருவாக்கம் செய்யப்பட்ட பாடசாலையின் புகழ் கூறும் பாடலும்,பாடசாலைக்கீதமும் மின்னொளிப்பேழையாக வெளியீடு செய்திருந்தமையானது எமது ஒன்றியத்துக்கு சிறப்பையும்தாய்பாடசாலைக்கும் ஒன்றியத்துக்குமான நெருக்கமான உறவை மேன் மேலும் பேணுவதற்கான வாய்ப்பையும்அமைத்துத் தந்தது எனலாம். இவ்வரிய வாய்ப்பை வழங்கிய அதிபர் உள்ளிட்ட பாடசாலைச்சமூகத்திற்கு நோர்வேஒன்றிய அங்கத்தவர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு ,மின்னொளிப்பேழை
வெளியீட்டில் கலந்து சிறப்பித்த நிர்வாக உறுப்பினர் திரு ப. சுதர்சனுக்கு எம் பாராட்டுகளைத் தெரிவிப்பதில் மட்டற்றமகிழ்ச்சி அடைகிறோம்.