எமது தாய்ப்பாடசாலையில் கல்விகற்ற மாணவர்களில் ஒரு பகுதியினர் க.பொ.த. (சாதாரணதரம்) வரையில் கல்வியைத் தொடர்ந்தார்கள் பின்னர் அவர்களது கல்வியை தொழில்நுட்பம் சார்ந்த கல்வியாகவே அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவை உருவானது. ஓர் சமூகம் ஆரோக்கியமான வளர்ச்சியை அடைவதெனில் சரிநிகராக சகலதுறைகளும் வளரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அவ்வழி முதற்கட்டமாகச் சிலதுறைசார்ந்த தொழிற்பயிற்சியும் பிறமொழிக்கற்கையும் தொடங்கும் எண்ணம் அதிபர் திரு. ந. சர்வேஸ்வரன் அவர்களுக்கு இருந்தது. அந்நேரம் இக்கல்வித்திட்டத்தைச் செயற்படுத்துவதில் பல சிக்கல்களையும் அதிபர் இனங்கண்டிருந்தார். அவற்றை எமது ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அத்தேவையை ஒன்றியம் புரிந்து அப்பணியை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க உடன்பட்டது.
மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த வகுப்பறைத் தொகுதிகளை நவீனமுறையில் புனரமைப்புச் செய்வதற்காக சுமார் 1000000 இலங்கை ரூபாவை ஒன்றியம் வழங்கியது. அதன் வேலைத்திட்டங்கள் துரிதமாக நிறைவேறியன. அவ்வகுப்பறைத்தொகுதியின் திறப்பு விழாவில் எமது ஒன்றியம் சார்பாகப் பலர் கலந்து சிறப்பித்தபோது எடுக்கப்பட்ட நிழற்படங்களையும் இங்கு காணலாம். புனரமைத்த வகுப்பறைகளின் பாவனையையும் பயன்பாட்டையும் இன்று பார்க்கும் போது பலரும் மனநிறைவு கொள்ளும் விதத்தில் சிறப்பாக இயங்கிவருகிறது. தற்போது விரும்பும் சில தொழில்கள் மற்றும் வேற்றுமொழிகள் போன்றவற்றைச் சிறப்பாகக் கற்றுத் தேர்ச்சி பெற ஆர்வமாக உள்ள மாணவர்களை அந்த வகுப்பறைத்தொகுதியில் காணலாம்.
இப்பணியைச் செப்பனிட உதவிய அதிபர் திரு. ந. சர்வேஸ்வரன் உள்ளிட்ட அனைவருக்கும் ஒன்றியம் சார்பாக நன்றிகள். ஓர் ஆதாரத் தொழிலாக அவர்களின் வாழ்க்கைக்கு உதவும் உன்னத நோக்கம் கொண்ட இப்பணிக்கு நோர்வே ஒன்றியம் உதவியிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இப்பணிக்கு உறுதுணையாக உள்ள நோர்வே ஒன்றியத்தின் அங்கத்தவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.