மூன்று மாடிகள் கொண்ட முற்பது வகுப்பறைகள் சாவகச்சேரி இந்துக் கல்லூரி கடந்த 120 ஆண்டுகளாக வட இலங்கையில் உயர்தரக் கல்வியை வழங்கி வரும் ஒரு தொன்மையான மற்றும் தலைசிறந்த கல்வி நிறுவனமாக விளங்குகிறது. பல துறைகளில் மதிப்புக்குரிய சாதனைகளைப் பதிவுசெய்த எண்ணற்ற பழைய மாணவர்களை உருவாக்கி, அவர்களின் பெருமைக்குரிய பங்களிப்புகளின் மூலம் இந்நிறுவனத்தின் கீர்த்தி உலகளாவிய அளவில் உயர்ந்து வருகிறது. கல்லூரியின் கல்விச் செயல்திறன் தொடர்ந்தும் மேம்படுவதற்காக பௌதீக வசதிகளின் விரிவாக்கமும் நவீனமயமாதலும் அவசியம் என்பதை கருத்திற்கொண்டு,...
Year: 2025
புதிதாக இணையும் கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி
எமது ஒன்றியத்தால் முன்னெடுத்துவரும் கல்விக்கு கைகொடுப்போம் திட்டத்தில் இவ்வாண்டிலும் புதிதாக ஆறு(6 )மாணவர்கள் உதவி பெறத்தெரிவாகியுள்ளனர். இவர்கள் கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.பல வருடங்களாக ஒன்றியத்தின் உதவித்திட்டத்தால் பயன் அடைந்துவரும் பாடசாலைகளின் வரிசையில் இவ்வாண்டு புதிதாக இணைக்கப்படும் கல்லூரி இது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு August.2025 ல் இருந்து நடைமுறைப்படுத்தப்படும். ஒன்றியத்தின் வேர்களாக, அதன் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக பலர் திகழ்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றியத்தின் மனமார்ந்த நன்றிகள்.
2024 – G.C.E.(O/L) பெறுபேறுகள்
Vidathathlpalai Kamalasini M.V Jeyarasa Nirusan – 1A,6B,1C,1S Kilinochchi Hindu Colloge. Jeyasri Thivia – 8A,1B Suthakar Isaiyarasan – 7A,1B,1 Kaithady Vikneswara Suthakaran Magelnila – 9A Vidathathlpalai Kamalasini M.V 5 ம் வகுப்பு புலமைப்பரீட்சை பெறுபேறுகள் Sivakaran Mirnika 143 புள்ளிகள் வெட்டுப்புள்ளி (139)

