ஒற்றுமையே வலிமை!

ஒற்றுமையே வலிமை!

யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பௌதீக வளர்ச்சிக்காக தற்போதைய அதிபர் திரு. ந. சர்வேஸ்வரன் அவர்கள் முன்னெடுத்து வரும் முயற்சிகள் வரலாற்றுச் சிறப்புடையவை. கல்லூரியை நவீனப்படுத்தும் நோக்கில் நீண்டகாலத் திட்டம் உருவாக்கி, உலகம் முழுவதும் உள்ள பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டுள்ளார். மாணவர்கள் தாமே நிர்வாகத்தில் பங்கேற்கும் ஜனநாயக முறையுடனும் திட்டம் முன்னேறியுள்ளது. இத்திட்டம் அரசின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, பழைய மாணவர்களின் முழு ஆதரவுடன் 30 நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட வகுப்பறைகள் அடங்கிய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா ஏப்ரல் 9ஆம் தேதி விமரிசையாக நடைபெறவுள்ளது. இதில் உலகெங்கும் உள்ள அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொண்டு ஆதரிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.