About Youth Org
About Youth Organization
எம்மை பற்றி – இளையோர் அமைப்பு
About Chavakachcheri Hindu College Old Student Union Norway – Youth Organization
”யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம் நோர்வே” தனது வளர்ச்சியின் ஒரு படியாக 21.04. 2019 ம் ஆண்டு ஒஸ்லோவில், நோர்வேயில் உள்ள இலங்கையை பின்னணியாக கொண்டவர்களின் இரண்டாம் தலைமுறையினரை ஒன்று திரட்டி, இளையோர்களுக்குள் இங்கு ஒரு நட்புவட்டதை உருவாக்கவும், இளையோர் தமது தலைமுறையினரின் தாயகத்தை நோக்கி தங்களால் இயன்ற பொதுப்பணிகளை செயற்படுத்தும் நோக்கத்துடன் «இளையோர் அமைப்பு» ஆரம்பிக்கப்பட்டது.
நாம் யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றிய யாப்புக்கு அமைய ஒன்றியத்தின் கீழ் இயங்கும் ஒரு உப அமைப்பு.
இளையோர் அமைப்பில் 16 – 26 வயதிற்கு உட்பட்ட இலங்கையை பின்னணியாக கொண்டவர்கள் இணையலாம்.
எமது நோக்கம்
தாயகத்தில் உள்ள தமிழ் மாணவ சமுதாயத்தின் அடிப்படை சுகாதார, கல்விசார்ந்த வசதிகளை மேம்படுத்துவது.
எமது பணி
- தாய்சங்கத்திக்கும், அதன் செயற்பாடுகளுக்கும் உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருத்தல்.
- நோர்வேயில் வசிக்கும் இளையோர்களை ஒன்றினைத்து அதன்மூலம் தாயகத்திலுள்ள தமிழ் மாணவ சமுதாயத்திற்கு எம்மால் முடிந்தளவு அடிப்படை சுகாதார, கல்விசார்ந்த உதவிகளை வழங்குதல்
- இளையோர்களிடையே நல்ல புரிந்துணர்வை உருவாக்குதலோடு, தாய்சங்கத்தின் செயற்பாடுகளை செயல்படுத்து கூடிய ஒரு எதிர்கால சந்தியினர் உருவாக்குவது.