நோர்வே – யா / சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்”
இலங்கையில் நீடித்த யுத்ததின் காரணமாக தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டினுள் தவிக்கின்ற, கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களுக்கும், எமது ஒன்றியம் தாயகத்தில் உள்ள சில பாடசாலைகளின் அதிபர்களின் / நிர்வாகத்தினரின் உதவியுடன் மாணவர்களை தெரிவு செய்து, தாயகத்திற்கு வெளியில் வசிக்கும் குடும்பத்தினர்களிடம் / தனி நபர்களிடம் இந்த மாணவர்களின் கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான எற்பாடுகளை செய்து கொடுத்துவருகின்றது.
2013ம் ஆண்டு – நோர்வே, மற்றும் கனடாவில் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினரின் ஆதரவுடன் கச்சாய் பகுதியிலுள்ள 8 மாணவர்களுடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று இத்திட்டத்தின் மூலம் 7 பாடசாலையை சேரந்த 64 மாணவர்கள் உதவி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு நோர்வே, கனடா, டென்மார்க்கில் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 46 குடும்பத்தினரின் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
2013 – 2019 வரை – 28 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
உதவி பெறும் மாணவர்களின் பாடசாலைகள்
- யா/ கச்சாய் அ. த. க. பாடசாலை.
- கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம்.
- யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.
- யா/ கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயம்.
- கிளிநொச்சி இந்துக்கல்லூரி.
- விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயம்.
- கைதடி நுணாவில் அ.த.க பாடசாலை.