“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஆரம்பம்

“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஆரம்பம்

“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்”

வறுமை கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தை” 2013 ல்  நோர்வே, மற்றும் கனடாவில் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினரின் ஆதரவுடன் கச்சாய் பகுதியிலுள்ள 8 மாணவர்களுடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது.

திட்டம் உருவானவிதம்.

2010 ம் ஆண்டு முதல் நோர்வே, மற்றும் கனடாவில் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட இத்திட்டம், இத்திட்டத்தால் பல மாணவர்கள் பயன் பெறவேண்டும் என்ற வேண்டுகோள்களின் படி ஒன்றியத்தால் 2013ம் ஆண்டு முதல் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” என்ற பெயரில் அவர்களின் ஆதரவுடன் கச்சாய் பகுதியிலுள்ள 8 மாணவர்களுடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

திட்டத்தை உருவாக்கிய குடும்பத்தினர்:

கோமதி திலீபன் (கனடா)

விஜயபார்வதி அகஸ்தியன் (கனடா – இந்தியா)

மீரா விவேதரன் (நோர்வே)

வளர்மதி செல்வசிறி (நோர்வே)

இலங்கையில் நீடித்த யுத்ததின் காரணமாக தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டினுள் தவிக்கின்ற, கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களுக்கும், எமது ஒன்றியம் தாயகத்தில் உள்ள சில பாடசாலைகளின் அதிபர்களின் / நிர்வாகத்தினரின் உதவியுடன் மாணவர்களை தெரிவு செய்து, தாயகத்திற்கு வெளியில் வசிக்கும் குடும்பத்தினர்களிடம் / தனி நபர்களிடம் இந்த மாணவர்களின் கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துவருகின்றது.

இத்திட்டம் மாணவர்களின் கல்விக்கு பெரிய உறுதுணையாக இருக்கும் எனவும், எதிர்காலத்தில் இத்திட்டத்தின் மூலம் பல பாடசாலையை சேர்ந்த பல மாணவர்கள் பயனடைவார்கள் என ஒன்றியம் நம்பிக்கை கொண்டுள்ளது.