எமது ஒன்றியம் தொடற்சியாக தாயகம் நோக்கிய பணிகளை முன்னெடுத்துவருவதை நீங்கள் அறிவீர். அதிலும்குறிப்பாக கற்றல்,கற்பித்தல் போன்றவற்றை ஊக்குவிப்பதில் உங்களது தாராளபங்களிப்பு எப்போதுமே உண்டுஎன்பதை ஒன்றியம் மறவாது. அந்த வகையில் கடந்த ஆனிமாதம் 7ம் திகதி சுமார் இலங்கை ரூபா (6,50,000 )ஆறுஇலட்சத்து ஐம்பதாயிரம் பெறுமதியான மூன்று Multimedia projector ரை மூன்று நலன் விரும்பிகளின் பேராதரவோடுஎமது தாய்பாடசாலைக்கு வழங்கியிருந்தோம். இவ் நிகழ்வு மிக எளிமையாக சா.இ.கல்லூரியில் இடம் பெற்றது.அனுசரணையாளரில் ஒருவரான திரு சுப்ரமணியம் புலேந்திரலிங்கம் அவர்கள் அன்பளிப்பை வழங்க பாடசாலையின்அதிபர் திரு நடராஜா சர்வேஸ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.இவ் நெருக்கடியான சூழலிலும் நன்கொடை வழங்கமுன்வந்த திரு சுப்ரமணியம் புலேந்திரலிங்கம் திரு நல்லதம்பி சிறீகாந், மற்றும் திரு மகேஸ்பரன் ரகுபரன்,ஆகியோருக்கு ஒன்றியம் தனது நன்றிகளைத் தெரிவிக்கின்றது. உபகரணப்பயன்பாட்டால் பல மாணவர்கள் பயன்பெறுவர் எனும் மன நிறைவோடும், உங்களின் ஆதரவோடு மேன் மேலும் பல நற்பணிகளைத் தொடருவோம்