தென்மராட்சியில் கொடிகாமம் பிரதேசத்தில் யா/ போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின்வகுப்பறைகளுக்குள் புறாக்கள் குடிகொள்வதால் பல அசௌகரியங்களுக்குட்பட்டு மகிழ்வாக கல்விகற்கமுடியாதிருப்பதாக, அப்பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கமைய, எமது ஒன்றியத்தால் அப்பாடசாலைக்குவசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
வகுப்பறை கூரைக்கு லெவல் சீற் அடிக்கப்பட்டுள்ளது.
பறவைகள் வராது வகுப்பறைகளைச்சுற்றி வலை போடப்பட்டுள்ளது.
மின்விசிறி வாங்கியதோடு, வகுப்பறைச்சுவர்களுக்கு நிறப்பூச்சும் பூசப்பட்டுள்ளது.
இவற்றிற்குரிய செலவு ரூபா 450 000,- ஐ நிதிப்பங்களிப்பாக 03/06/22 அன்று வழங்கி, அம்மாணவர்களின்அசௌகரியங்களை
நிவர்த்தி செய்துள்ளோம்.