About Us
எம்மை பற்றி
About Chavakachcheri Hindu College Old Student Union Norway
”யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம் நோர்வே” 1999ம் ஆண்டு ஒஸ்லோவில் இங்குள்ள பழைய மாணவர்களால், பழைய மாணவர்களை ஒன்று திரட்டி எமது கல்லூரி நினைவலைகளை பகிர்ந்துகொள்ளல் என்றவகையில் ஆரம்பிக்கப்பட்டது.
அந்தக்காலப்பகுதியில் ஒன்றியத்தின் செயற்பாடுகள் கல்லூரியை நோக்கி ஓரளவு நகர்ந்திருந்தாலும் இலங்கையில் இடம்பெற்ற போரினால் ஒரு தேக்க நிலையிலேயே இருந்தது.
எமது தாய்க்கல்லூரியின் நூற்றாண்டுடில் மீண்டும் 21.09.2004 முதல் கல்லூரியின் வளர்ச்சிக்கும், பொதுப்பணிகளுக்கும் நோர்வே பழைய மாணவர்களின் பங்களிப்பு தேவை என்ற கருத்தின் அடிப்படையில் ஆர்வமுள்ளவர்களாலும், இளைப்பாறிய ஆசிரியை திருமதி சரஸ்வதி பொன்னம்பலம் அவர்களுடைய ஆலோசனையிலும் புதிய நிர்வாகத்தின் செயற்பாடுகள் ஆரம்பித்து, தனது செயற்பாடுகளை முன்னேடுத்து வருகின்றது.
எமது நோக்கம்
அறிவாற்றல் உள்ள தமிழ் மாணவ சமுதாயத்தை உருவாக்குவது.
எமது பணி
- நோர்வேயில் வசிக்கும் அனைத்து பழைய மாணவர்களையும் ஒன்றுதிரட்டல். அதன்மூலம் தமது பாடசாலை நினைவலைகளை பகிர்ந்துகொள்ள களமமைத்துக் கொடுத்தல்.
- சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் வளர்ச்சிக்கு எம்மால் முடிந்தளவு பங்களிப்பு செய்தல்.
- சாவகச்சேரியை சூழவுள்ள ஏனைய பாடசாலைகட்கு கல்விசார்ந்த, மற்றும் ஏனைய அடிப்படைவசதிகளை அறிந்து, எம்மால் முடிந்த, வருடத்திற்கு ஒருதடவை ஒருபாடசாலை என்ற ரீதியில் உதவுதல்.
அன்றிலிருந்து…
எமது ஒன்றியத்தின் பொதுப்பணிகண்டு, அப்பணிகளுக்கு உறுதுணையாக பழையமாணவர்களோடு இணைந்து பல நலன் விரும்பிகளும் உற்சாகத்தோடு தோள் நிற்கின்றனர். 5ம்,10ம், 15ம் ஆண்டு விழாக்களை காணவந்தோர் பலரும் எமது வெளிப்படையான, நேர்த்தியான, பெறுமதிமிக்க காலத்தையுணர்ந்த எம் செயற்பாடுகள் கண்டு பெருமிதம் அடைந்ததோடு, நிர்வாக ஆளுமை கண்டும் வியந்தனர்.
இதன் ஓர் மைல் கல்லாக 21.04.2019 உதயமான எமது அடுத்த சந்ததியினரின் இளையோர் அமைப்பினரால் தாயகத்தில் செயல்படுத்திய முதல் திட்டம், ஒன்றியத்தின் 15ம் ஆண்டுவிழாவில் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது.
அங்கத்தவர்களுடனான எமது தகவல் தொடர்புகள் கூடுதலாக mail ஊடாகவே அமையும். எமது mail: chc.oldstudentnorway@gmail.com எம்மால் அனுப்பபடுகின்ற mail களுக்கு உங்களிடமிருந்து வரும் பதிலும், ஆலோசனைகளும் தான் எம்மை ஊக்கப்படுத்தும்.
Org.nr: 988 131 822.
Bank A/C Nr : 1503 35 89260.
எம்முடன் தொடர்புகொள்ள தயங்கவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாகம்.
யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம் நோர்வே.