Author: hinducollege chava (hinducollege chava)

Home / hinducollege chava
புதிதாக இணையும் கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி
Post

புதிதாக இணையும் கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி

எமது ஒன்றியத்தால் முன்னெடுத்துவரும் கல்விக்கு கைகொடுப்போம் திட்டத்தில் இவ்வாண்டிலும் புதிதாக ஆறு(6 )மாணவர்கள் உதவி பெறத்தெரிவாகியுள்ளனர். இவர்கள் கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.பல வருடங்களாக ஒன்றியத்தின் உதவித்திட்டத்தால் பயன் அடைந்துவரும் பாடசாலைகளின் வரிசையில் இவ்வாண்டு புதிதாக இணைக்கப்படும் கல்லூரி இது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு August.2025 ல் இருந்து நடைமுறைப்படுத்தப்படும். ஒன்றியத்தின் வேர்களாக, அதன் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக பலர்  திகழ்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றியத்தின் மனமார்ந்த நன்றிகள்.

Post

2024 – G.C.E.(O/L) பெறுபேறுகள்

Vidathathlpalai Kamalasini M.V Jeyarasa Nirusan – 1A,6B,1C,1S Kilinochchi Hindu Colloge. Jeyasri Thivia  – 8A,1B Suthakar Isaiyarasan – 7A,1B,1 Kaithady Vikneswara Suthakaran Magelnila – 9A Vidathathlpalai Kamalasini M.V 5 ம் வகுப்பு புலமைப்பரீட்சை பெறுபேறுகள் Sivakaran Mirnika 143 புள்ளிகள் வெட்டுப்புள்ளி (139) 

Post

2023 – கிளி/பூநகரி ஶ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம் – நிதி அன்பளிப்பு

நிதி அன்பளிப்பு கிளி / பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் இருபது மாணவர்களுக்கான பாதணிகள் கொள்வனவுக்கான நிதி அன்பளிப்புச் செய்யப்பட்டது.  இவ்விரு பயனுள்ள பணிகளையும் செய்து, எம் சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் எமது இளையோர் அமைப்பினரின் பணிகள் தொடர எம் பாராட்டுகள்! 

2023 – யா / கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயம் – குடிநீர் சுத்திகரிப்புச் சாதன மீளியக்கம்
Post

2023 – யா / கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயம் – குடிநீர் சுத்திகரிப்புச் சாதன மீளியக்கம்

குடிநீர் சுத்திகரிப்புச் சாதன மீளியக்கம் யா / கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு ஏற்கனவே இளையோர் அமைப்பினரால் வழங்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்புச் சாதனமானது, மாணவர்களின் குடிநீர்த் தேவையைத் தீர்த்து வந்தது. சில ஆண்டுகளின் பின் பழுதடைந்த சுத்திகரிப்பு இயந்திரமானது, சீர்செய்யப்பட்டு  மீள்பாவனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

2023 – மாணவர்களின் கல்விப் பயன்பாட்டிற்கு- வகுப்பறைத்திருத்தவேலை
Post

2023 – மாணவர்களின் கல்விப் பயன்பாட்டிற்கு- வகுப்பறைத்திருத்தவேலை

தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் யா/ போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு வழங்கும் திட்டத்திற்காக ஒன்றியத்தால் ஒதுக்கப்பட்ட நிதி அப் பாடசாலை கணக்கில் வைப்புச் செய்யபட்டது . இக் காலப்பகுதியில் தான் அரசும் சத்துணவுத்திட்டத்திற்கு உதவ முன்வந்தது. அதே வேளை எமது நிதியை மீளப்பெறுவதில் பல சிரமங்களும் இருந்தன.இதை உணர்ந்த நாம் அதே பாடசாலையில் பிறதொரு திட்டமான வகுப்பறைத்திருத்தவேலைக்கு பயன்படுத்த அனுமதி வழங்கினோம். அப்பணி பூர்த்தியடைந்துள்ளது.இது போன்ற திட்டம் இப்பாடசாலைக்கு எம்மால் ஏற்கனவே வழங்கப்பட்டதும்...

  • 1
  • 2
  • 5