30 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு. சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பழைய மாணவன் வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவாக, நகுலேஸ்வரனின் நோர்வே வாழ் சகோதரர் திரு. வே. சற்குணம் அவர்களால் – நோர்வே – இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடன், நகுலேஸ்வரன் கல்வி பயின்ற சாவகச்சேரி இந்துக்கல்லூரி, மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம், கிளி. கண்டாவளை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் 30 வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை 24 / 5 அன்று சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் அதிபர்...
Category: News & Articles
காணிக்கொள்வனவு
காணிக்கொள்வனவு எமது பாடசாலையின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பாடசாலையின் நீண்டநாள் கோரிக்கையான “இலக்கம் 1 கைலாசபிள்ளை வீதி”யில் அமைந்துள்ள காணி ஒன்றியத்தின் முழுமையான பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இக் காணியில் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட ஒரு பெரிய தொகையில் கட்டிங்கள் அமைக்கப்படுகின்றது. மேலதிக விபரங்களுக்கு “Completed Projects 2016/2017” பார்வையிடவும்.
10 வது ஆண்டு விழா
எமது ஒன்றியத்தின் “10 வது ஆண்டு விழா” 24. 10. 2014 வெள்ளி மாலை 18:00 மணி “Engel Paradis Oslo” வில் நடக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஆரம்பம்
“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” வறுமை கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தை” 2013 ல் நோர்வே, மற்றும் கனடாவில் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினரின் ஆதரவுடன் கச்சாய் பகுதியிலுள்ள 8 மாணவர்களுடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. திட்டம் உருவானவிதம். 2010 ம் ஆண்டு முதல் நோர்வே, மற்றும் கனடாவில் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட இத்திட்டம், இத்திட்டத்தால் பல மாணவர்கள்...
2012 – எம்முடன் எவரும் உதவி கேட்டு தொடர்பு கொள்ளாத காரணத்தால்
எம்முடன் எவரும் உதவி கேட்டு தொடர்பு கொள்ளாத காரணத்தால் எம்மால் எந்த திட்டமும் செயற்படுத்தமுடியவில்லை என மனம் வருந்துகின்றோம்.
கலைமாலை 2011
எமது ஒன்றியத்தின் “கலைமாலை 2011” 07. 05. 2011 சனிக்கிழமை மாலை 18:00 மணி Grorud Samfunn hus நடக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கலைமாலை 2005
எமது ஒன்றியத்தின் “கலைமாலை 2005” 29. 10. 2005 சனி மாலை 18:00 மணி “Grorud Samfunn hus” ல் நடக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஒன்றியத்தின் முதலாவது செயற்திட்டம்
சுவர்ணி நகைமாடம் (Norway) ஆதரவில் யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு நிழற்பட இயந்திரம் (Kopimaskin) அன்பளிப்பு செய்யப்பட்டது. மேலதிக விபரங்களுக்கு “Completed Projects 2004” பார்வையிடவும்
- 1
- 2