யா/ மந்துவில் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் வித்தியாலயத்திற்கு TOSHIBA E-Studio 2007 நிழற்பட இயந்திரம் திரு. சு. கிருஷ்ணகுமார் (வலயக்கல்வி அதிகாரி) தலமையில் அன்பளிப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா – 155 680
Category: Our Projects
2014 யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.
“தொடரும் பங்களிப்புகள்”. யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர்களுக்கான வேதனமாக இலங்கை ரூபா 120 000 வருடம் வழங்கப்பட்டது. இத்திட்டம் 01.11.2013 முதல் நடைமுறையில் உள்ளது.
2013 – யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.
யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 01.11.2013 முதல் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு உதவியாளர்கள் இரு மாணவர்கள் நியமனம் செய்தனர். கல்லூரியில் உயர்தரபரீட்சை எழுதி பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் இம் மாணவர்களுக்கு அவர்களுடைய எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மாதாந்தம் தலா ஜந்தாயிரம் ரூபா ஊதியமாக வழங்கபடுகின்றது. இத்திட்டத்திற்கு 2011ல் சிற்றுண்டிச்சாலைக்கு வைப்பு செய்யப்பட்ட பணத்திலிருந்து ஊதியம் வழங்கப்பட்டுவருகின்றது. இலங்கை ரூபா 20 000.
2013 – யா/ கச்சாய் அ. த. க. பாடசாலை.
யா/ கச்சாய் அ. த. க. பாடசாலை ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் மற்றும் பூங்கா அமைக்கப்பட்டது. தென்மராட்சி வலயகல்வி பொறுப்பாளர் திரு. கிருஷ்ணகுமார் அவர்களால் திறந்துவைககப்பட்டது. இலங்கை ரூபா 300 000.
2013 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.
இலங்கையில் நீடித்த யுத்ததின் காரணமாக தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டினுள் தவிக்கின்ற, கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களுக்கும், எமது ஒன்றியம் தென்மராட்சியில் உள்ள சில பாடசாலைகளின் அதிபர்களின் / நிர்வாகத்தினரின் உதவியுடன் மாணவர்களை தெரிவு செய்து, புலம் பெயர்ந்து வாழும் உதவிமனப்பான்மையுள்ள குடும்பத்தினர்களிடம் / நபர்களிடம் இந்த மாணவர்களின் கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றோம். 2013 ம் ஆண்டு முதல் Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை...
2012 – எம்முடன் எவரும் உதவி கேட்டு தொடர்பு கொள்ளாத காரணத்தால்
எம்முடன் எவரும் உதவி கேட்டு தொடர்பு கொள்ளாத காரணத்தால் எம்மால் எந்த திட்டமும் செயற்படுத்தமுடியவில்லை என மனம் வருந்துகின்றோம்.
2011 – யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி
சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு சிற்றுண்டிச்சாலை கட்ட மிகுதி நிதியாக வங்கியில் வைப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 750 000. மொத்தமாக வைப்பு செய்யப்பட்ட தொகை இலங்கை ரூபா 825 000. சிற்றுண்டிச்சாலையை பல காரணங்களால் எம்மால் பூர்த்திசெய்ய முடியவில்லை.
2011 – கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலம்.
கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலத்துக்கு டுப்ளோ போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டது. இத்திட்டதால் திருநாவுக்கரசு மகாவித்தியாலயத்தை சுற்றியுள்ள 7 பாடசாலைகள் பயனடைகின்றது. அப்பாடசாலைகள் 1) யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலயம். 2) யா/ விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயம். 3) யா/ கெற்பேலி அ.த.க. பாடசாலை. 4) யா/ போக்கட்டி றோ.க.த.க. பாடசாலை. 5) யா/ போக்கட்டி அ.த.க. பாடசாலை. 6) யா/ மிருசுவில் றோ.க.த.க. பாடசாலை. 7) யா/ கச்சாய் அ.த.க. பாடசாலை. மிகுதிப்பணத்தில் மதில்...
2010 சாவகச்சேரி இந்துக்கல்லூரி.
இந்துக்கல்லூரிக்கு சிற்றுண்டிச்சாலை கட்ட ஆரம்ப நிதியாக வங்கியில் வைப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 75 000 திட்ட மதிப்பீடு கிட்டத்தட்ட 10 லட்சம்.
2010 – மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயம்.
மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயம் – நிழற்படஇயந்திரம் (Kopimaskin) அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த 50 மாணவர்களுக்கான சப்பாத்துகள் (50 par sko) என்பன அன்பளிப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 185 000