இலங்கையில் நீடித்த யுத்ததின் காரணமாக தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டினுள் தவிக்கின்ற, கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களுக்கும், எமது ஒன்றியம் தென்மராட்சியில் உள்ள சில பாடசாலைகளின் அதிபர்களின் / நிர்வாகத்தினரின் உதவியுடன் மாணவர்களை தெரிவு செய்து, புலம் பெயர்ந்து வாழும் உதவிமனப்பான்மையுள்ள குடும்பத்தினர்களிடம் / நபர்களிடம் இந்த மாணவர்களின் கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றோம். 2013 ம் ஆண்டு முதல் Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை...
Category: Our Projects
2012 – எம்முடன் எவரும் உதவி கேட்டு தொடர்பு கொள்ளாத காரணத்தால்
எம்முடன் எவரும் உதவி கேட்டு தொடர்பு கொள்ளாத காரணத்தால் எம்மால் எந்த திட்டமும் செயற்படுத்தமுடியவில்லை என மனம் வருந்துகின்றோம்.
2011 – யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி
சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு சிற்றுண்டிச்சாலை கட்ட மிகுதி நிதியாக வங்கியில் வைப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 750 000. மொத்தமாக வைப்பு செய்யப்பட்ட தொகை இலங்கை ரூபா 825 000. சிற்றுண்டிச்சாலையை பல காரணங்களால் எம்மால் பூர்த்திசெய்ய முடியவில்லை.
2011 – கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலம்.
கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலத்துக்கு டுப்ளோ போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டது. இத்திட்டதால் திருநாவுக்கரசு மகாவித்தியாலயத்தை சுற்றியுள்ள 7 பாடசாலைகள் பயனடைகின்றது. அப்பாடசாலைகள் 1) யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலயம். 2) யா/ விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயம். 3) யா/ கெற்பேலி அ.த.க. பாடசாலை. 4) யா/ போக்கட்டி றோ.க.த.க. பாடசாலை. 5) யா/ போக்கட்டி அ.த.க. பாடசாலை. 6) யா/ மிருசுவில் றோ.க.த.க. பாடசாலை. 7) யா/ கச்சாய் அ.த.க. பாடசாலை. மிகுதிப்பணத்தில் மதில்...
2010 சாவகச்சேரி இந்துக்கல்லூரி.
இந்துக்கல்லூரிக்கு சிற்றுண்டிச்சாலை கட்ட ஆரம்ப நிதியாக வங்கியில் வைப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 75 000 திட்ட மதிப்பீடு கிட்டத்தட்ட 10 லட்சம்.
2010 – மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயம்.
மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயம் – நிழற்படஇயந்திரம் (Kopimaskin) அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த 50 மாணவர்களுக்கான சப்பாத்துகள் (50 par sko) என்பன அன்பளிப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 185 000
2009 – மீசாலை கமலாம்பிகை வித்தியாலயம்.
மீசாலை கமலாம்பிகை வித்தியாலய பின்புற மதில் மாணவர்களின் பாதுகாப்பிற்கும், கற்றலுக்கு இடையூறின்றி இருப்பதற்காகவும் கட்டப்பட்டது. இலங்கை ரூபா 251 875
2008 – சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆரம்பபாடசாலை.
சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆரம்பபாடசாலைக்கு நிழற்பட இயந்திரம் (Kopimaskin), மின்பொருள், மின் இணைப்பு வேலை அன்பளிப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 241 500
2007 – நாட்டு நிலமை காரணமாக எந்த திட்டமும் செயற்படுத்தமுடியவில்லை.
நாட்டு நிலமை காரணமாக எந்த திட்டமும் செயற்படுத்தமுடியவில்லை. மனம் வருந்துகின்றோம்.
2006 – யா/ நுணாவில் கிழக்கு அமிர்தாம்பிகை வித்தியாலயம்.
நுணாவில் கிழக்கு அமிர்தாம்பிகை வித்தியாலயம் – நூலககட்டிடதிருத்தம், நூலகத்திற்கு தேவையான நூலக உபகரணங்கள், நூல்கள், நிழற்பட இயந்திரம் (Kopimaskin) வழங்கப்பட்டது. இலங்கை ரூபா 130 000




