கைதடி நுணாவில் அ.த.க பாடசாலையில் தாய், தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர்/பாதுகாவலர் இருந்தும் வறுமைக்கோட்டினுள் தவிக்கின்ற, கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை, எமது ஒன்றியம் புலம்பெயர்ந்து வாழும் நலன்விரும்பிகளின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பணஉதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்தி கொடுத்துள்ளது. பாடசாலை அதிபர் திரு. அ. தங்கவேலு அவர்களின் தலைமையில், பொறுப்பாசிரியர் திருமதி. க. ஸர்மினி, மாணவர்கள், பெற்றோர் முன்னிலையில் இத் திட்டம் 24. 04. 2021 ஆரம்பித்துவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஐந்து (5) மாணவர்களுக்கு சித்திரை மாதம் (April) 2021 முதல், மாதம்...
2021 – கிளி/ பூநகரி ஶ்ரீ விக்னேஸ்வர மகா வித்யாலயாம்.
கிளி/ பூநகரி ஶ்ரீ விக்னேஸ்வர மகா வித்யாலயாத்தின் அத்தியாவசிய தேவையாக இருந்த நிழற்படஇயந்திரம்(Copy machine) கொள்வனவு செய்து வழங்கியுள்ளோம். பெறுமதி 220 000 இலங்கை ரூபா. உலகளாவிய கொரோனா பேரிடர் காலகட்டத்தில் கற்றல் கற்பித்தல் போன்றவற்றை இலகுபடுத்த இச்சாதனம் பேருதவியாக உள்ளதென அப்பாடசாலை சமூகம் தமது நன்றியறிதலை தெரிவித்துள்ளது. எமது தாயக உறவுகள் தொடர்ச்சியாக பலவிதமான நெருக்கடி நிறைந்த வாழ்க்கைச்சூழலையே சந்தித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். பல்வேறு தேவைகள் பூர்த்தியாகாமல் இருந்தாலும் மாணவர்களின் கல்விவளர்ச்சியையே கூர்ந்து கவனித்தும் அதையொட்டி உதவுவதிலுமே ஒன்றியம் மிகுந்த...
2020 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்
“தொடரும் பங்களிப்புகள்” மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம் தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 1 மாணவனுக்கு 30 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 19 மாணவர்களுக்கு 570 000 இலங்கை...
மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்
நோர்வே – யா / சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” இலங்கையில் நீடித்த யுத்ததின் காரணமாக தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டினுள் தவிக்கின்ற, கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களுக்கும், எமது ஒன்றியம் தாயகத்தில் உள்ள சில பாடசாலைகளின் அதிபர்களின் / நிர்வாகத்தினரின் உதவியுடன் மாணவர்களை தெரிவு செய்து, தாயகத்திற்கு வெளியில் வசிக்கும் குடும்பத்தினர்களிடம் / தனி நபர்களிடம் இந்த மாணவர்களின் கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான எற்பாடுகளை செய்து கொடுத்துவருகின்றது. 2013ம் ஆண்டு – நோர்வே, மற்றும்...
2020 விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயம்
எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஆறாவது (6) பாடசாலைக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது” – விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 மாணவர்களுக்கு July. 2020 முதல், மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது. 150 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது
ஒன்றியத்தின் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஐந்தாவது (5) பாடசாலைக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
ஒன்றியத்தின் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஐந்தாவது (5) பாடசாலைக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” – கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்து இத்திட்டத்தை மேலும் விரிபுபடுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 மாணவர்களுக்கு Sept. 2019 முதல், மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது. 100...
மாணவர்கள் இருவர் 2019 ல் நடந்து முடிந்த GCE O/L சித்தி பெற்று சாதனை…
ஒன்றியத்தின் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தினுடாக” உதவி பெறும் “ கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின்” மாணவர்கள் இருவர் 2019 ல் நடந்து முடிந்த GCE O/L சித்தி பெற்று சாதனை படைத்துள்ளமை அனைவர்க்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது. மதுஷாலினி பூபாலசிங்கம் 3A, 4B, C, S பாமினி பாலகுமார் A, 2B, 3C, 2S தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்கள், அதிபர், பெற்றோர் அனைவர்க்கும் ஒன்றியத்தின் சார்பிலும், உதவி வழங்கும் குடும்பத்தினரினதும் சார்பிலும்,வாழ்த்துக்கள்.
2020 – கொரோனா நிவாரணம்.
கொரோனா வைரஸ் உலகத்தின் இயல்பு நிலையில் பல பாரியமாற்றங்களையும், உயிர் இழப்புகளையும் உலகின் மூலை மூடுக்குகள் எல்லாம் ஏற்படுத்தியுள்ளது. இன்று மனித இனம், இன, மத, பேதம் கடந்து இந்த நோயிலிருந்து மீண்டு வருவதற்கு தன்னாலான எல்லா சேவைகளையும், உதவிகளையும் செய்து வருகின்றது. எமது தாயகத்தில் அன்றாட தொழில் வருமானம் மூலம் வாழும் பலரின் குடும்பங்கள் வருமானமின்றி அன்றாடம் உணவுக்கு கஸ்டப்படுகின்ற நிலையில் எமது மாணவர்களின் கல்விக்கான பணஉதவித்திட்டத்தின் மூலம் உதவி பெறும் மாணவர்களின் குடும்பத்திற்கும், அதே நிலையிலுள்ள அதே பாடசாலையில் கல்விகற்கும் ஏனைய...