வணக்கம்

யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம் – நோர்வே இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

Welcome to Chavakachcheri Hindu College Old Student Union Norway.

 

எமது தாய்ப் பாடசாலையின் நலன்களோடு மட்டும் நின்றுவிடாமல் ஒன்றியத்தின் ஆதரவை நம்பிக்கையோடு எதிர்பாத்து நிற்கும் சூழவுள்ள பாடசாலைகளுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் கல்விசார்ந்த, உதவிகளை தொடர்ச்சியாகவும், அவ்வப்போதும் வழங்கிவருவதன் மூலம் நோர்வேயிலும், புலம்பெயர் தேசங்களிலும், மற்றும் தாயகத்திலும் ஓர் நல்ல அங்கீகாரத்தை பெற்று இன்று ஓர் விருட்சமாக வளர்ந்து திடகாத்திரமாக நிற்கிறது.

குறிப்பாக தமது கல்வியை தொடர்வதற்கு வறுமையே தடையாக உள்ள
மாணவர்களை இனங்கண்டு 2013ம் ஆண்டு முதல் உதவிக்கரம் நீட்டி வருகிறது. ஒன்றியத்தின் இவ் நற்பணிகளுக்கு பக்கபலமாக நிற்கும் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் அணுசரணையாளர்களை
எப்போதும் ஒன்றியம் நன்றியோடு நினைவு கூரும்.

ஒன்றியம், இவ்வகையான பொதுப் பணிகளில் உங்களையும் இணைத்துக்கொள்ள பெரும் நம்பிக்கையோடு காத்து நிற்கிறது.

எம்மை பற்றி மேலும் அறிந்துகொள்ள எமது இணையத்தளத்தை பார்வையிடவும்.

Photo Gallery 

CHAVAKACHCHERI HINDU COLLEGE OLD STUDENT UNION NORWAY

Our Completed Projects

2016 யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.

“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் “கற்றலுக்கு கைகொடுப்போம்” திட்டத்தின் கீழ் உள்ள தாய் தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில்...

2016 கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம்.

கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு சீர்உடை, கல்விக்கு தேவையான உபகரணங்கள் வழங்கியது. இலங்கை ரூபா 44 000.

2015 மாணவர்களின் கல்விக்கு பண உதவித்திட்டம்

“தொடரும் பங்களிப்புகள்” Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 3 குடும்பத்தினர் கச்சாய் பகுதியிலுள்ள 4 மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்துவருகின்றனர்....

2015 யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.

தொடரும் பங்களிப்புகள். யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர்களுக்கான வேதனமாக இலங்கை ரூபா 120 000 வருடம் வழங்கப்பட்டது. இத்திட்டம் 01.11.2013 முதல் நடைமுறையில் உள்ளது.

Our Impact 1999-2020

0+ Number of projects
0+ Total projects cost LKR
0+ Schools Received Help
0+ Youth Org. projects
Stay Connected

Latest News & Events