We thanks to

Home / We thanks to
Chavakachcheri Hindu College Old Student Union Norway

We thanks to

இணையத்தளம்

சாவகச்சேரி இந்தக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் இணையத்தளத்தின் உரிமைக்கான (License) நிதிபங்களிப்பை ஆரம்பம் முதல் தொடர்ந்தும்  வழங்கி வரும் திரு. ம. ரகுபரன் அவர்கட்கும்,

இணையத்தளத்தை முதன் முதலாக வடிவமைத்து, இன்றுவரை (2020) பராமரித்து,  தேவையான ஆலோசனைகள் வழங்கிய  திரு. சி. ஜெகநாதன் அவர்கட்கும்,

இணையத்தளத்தை பராமரித்து, தளத்தினுடாக  தகவல்களை ஆரம்பம் முதல் தொடர்ந்தும் வழங்கி வரும் திரு. வி. விவேதரன் அவர்கட்கும், ஒன்றியத்தின் மனமார்ந்த நன்றிகள்.

15 வது ஆண்டு விழா -2019

ஒன்றியத்தின் 15 வது ஆண்டு விழா Engel paradis ன் பிரதான அனுசரனையோடு 10.11.2019 அன்று மிகச்சிறப்பாக இடம் பெற்றது. ஓர் சிறந்த தன்னார்வ அமைப்புக்கு உரிய உயர்ந்த அங்கீகாரம் இவ்விழாவில் ஒன்று கூடிய பெருந்திரளான ஆதரவாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் தாய்க்கல்லூரி உறவுகள் ஊடாக வெளிப்பட்டது.

கல்லூரியின் பழைய மாணவரும் விரிவுரையாளருமான திருவாளர் . அ. நிர்மலதாஸ் அவர்கள் அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்து பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

மங்கல விளக்கேற்றல், கல்லூரி கீதம், சிறப்புரைகள். நடப்பாண்டு அதிபர் திருவாளர் சர்வேஸ்வரன் அவர்களின் நீண்ட காணொளியுரை, வாழ்த்துப் செய்திகள், இயல், இசை, நாடகம், எனப் பெருவிழாவானது. ஒன்றிய வரலாற்றையும் அதன் பொதுப்பணிகளின் சிறப்புகளையும் அரங்க நிகழ்வுகள் எடுத்துக்காட்டியது.

ஒன்றியத்தின் பணிகளால் பயன்பெற்றோர் தமது வாழ்த்துச் செய்திகளையும் நன்றிகளையும் பெருமையோடு பகிர்ந்த பொழுது விழாக்காண வந்தோர் மனதை நெருடியது. பலருக்கு ஒன்றியத்தின் மேல் நல்ல புரிதலையும் ஏற்படுத்தியது எனலாம்.

ஒன்றியம் எடுத்துச் செல்லும் சில பொதுப் பணிகளில் பல நலன் விரும்பிகள் தாமாகவே இணைந்து கொண்டனர்.  விழாவைக் கொண்டாடும் வகையில் அமைந்த தரமான பல நிகழ்ச்சிகள், அதனை வழங்கிய உயர்ந்த கலைஞர்கள் ஒன்றியத்தின் கௌரவர்களே. அத்தோடு ஒன்றிய வருவாயைப் பலப்படுத்துவதற்காக உழைத்த அத்தனை நல்லுள்ளங்களும் போற்றுதலுக்கு உரியவர்களே.

” உன் நற்பணி யாவும் உனைத்தாண்டி வாழும்”

Varetelling.

5 jan 2014 Varetelling (Stocktaking) க்கு சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம் நோர்வே சார்பில் 16 பழையமாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டவர்கள் –
Agaash Sivakumar, Aginth Sivakumar, Sivakumar, Kamla Kanapathipillai, Thevaki Karunaharan, Karunaharan, Sathees Murugesu, Helmen, Viknarajah, Satkunam, Mathavan, Nirmalan, Shankar, Sri Ilango, Vijayan & Sivabalan.
இவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
இதில் 7 பேர் யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் இல்லாதவர்களும், அதில் Agaash & AginthNorwayயில் பிறந்த 13, 15 வயது சிறுவர்களும் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

Varetelling.

2 june 2013ல் நடந்த varetelling (stocktaking) க்கு சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம் நோர்வே சார்பில் பழையமாணவர்கள், அவர்கள் குடும்பத்தினரும் மற்றும் நலன்விரும்பிகள் 16பேர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டவர்கள் – Shashmi Kanthan, Sharmika Ravi, Aginth Sivakumar, Shagana Kugananthan, Thulasi Sivabalan, Kamala Kanapathipillai, Thevaki Karunaharan, Janani Gowary, Karunaharan, Sivakumar, Sri Ilango, Ragu, Vijayan, Anathan, Sivayogam & Sivabalan.
இவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
இதில் 7 பேர் யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் இல்லாதவர்களும், Norway யில் பிறந்த சிறுவர்களும் என்பதை நன்றியுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
இவர்களில் பலரும் காலை 08.00 மணி தொடக்கம் பகல் சுமார் 15.00 மணிவரை சிந்திய வியர்வைக்கு கிடைத்த பலன் சுமார் 14000 kr என்பதை நன்றியுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

Varetelling.

2012ல் varetelling க்கு சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம் நோர்வே சார்பில் பலரும் பல தடவைகள் மீண்டும், மீண்டும் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
இதில் சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் இல்லாதவர்களும், Norway யில் பிறந்த சிறுவர்களும் மீண்டும், மீண்டும் எமக்கு தோள் கொடுத்துள்ளனர் என்பதை நன்றியுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

2011 கலைமாலை.

2011 கலைமாலைக்கு அனுசரனை வழங்கிய வர்ணமஹால், சாரங்கா நகைமாடம், Flamenco pizza (Fjelhammer), Lucky Seven & Engel Paradis Decoration ஆகியோருக்கும்.
பிரதம விருந்தினர் Dr. தமயந்தி நகுலேஸ்வரதாஸ் அவர்களுக்கும், கௌரவ விருந்தினர் மயூரன் அண்ணாமலை அவர்களுக்கும், சிறப்பு விருந்தினர் கார்மேகம் நந்தா அவர்களுக்கும்.
பாடசாலை கீதம் இசைத்த, நடனநிகழ்ச்சிகள் வழங்கிய, நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சி வழங்கிய அனைவருக்கும் அதனை தொகுத்து வழங்கியவர்களுக்கும்
ஒலி, ஒளி அமைப்பு வழங்கியவர்களுக்கும் மற்றும் புகைப்படம், video எடுத்து உதவியவர்களுக்கும் திரைக்கு பின்னும், மேடையிலும், அரங்கத்திலும், அரங்கத்திற்கு வெளியிலும், சிற்றுண்டிசாலைக்கும், சிற்றுண்டி தயாரிப்பதற்கும் உதவியவர்களுக்கும்.
மற்றும் கலைமாலையை வெற்றிமாலையாக்கிய ரசிகர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.