நிதி அன்பளிப்பு கிளி / பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் இருபது மாணவர்களுக்கான பாதணிகள் கொள்வனவுக்கான நிதி அன்பளிப்புச் செய்யப்பட்டது. இவ்விரு பயனுள்ள பணிகளையும் செய்து, எம் சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக...
வணக்கம்
யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம் – நோர்வே இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Welcome to Chavakachcheri Hindu College Old Student Union Norway.
எமது தாய்ப் பாடசாலையின் நலன்களோடு மட்டும் நின்றுவிடாமல் ஒன்றியத்தின் ஆதரவை நம்பிக்கையோடு எதிர்பாத்து நிற்கும் சூழவுள்ள பாடசாலைகளுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் கல்விசார்ந்த, உதவிகளை தொடர்ச்சியாகவும், அவ்வப்போதும் வழங்கிவருவதன் மூலம் நோர்வேயிலும், புலம்பெயர் தேசங்களிலும், மற்றும் தாயகத்திலும் ஓர் நல்ல அங்கீகாரத்தை பெற்று இன்று ஓர் விருட்சமாக வளர்ந்து திடகாத்திரமாக நிற்கிறது.
குறிப்பாக தமது கல்வியை தொடர்வதற்கு வறுமையே தடையாக உள்ள
மாணவர்களை இனங்கண்டு 2013ம் ஆண்டு முதல் உதவிக்கரம் நீட்டி வருகிறது. ஒன்றியத்தின் இவ் நற்பணிகளுக்கு பக்கபலமாக நிற்கும் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் அணுசரணையாளர்களை
எப்போதும் ஒன்றியம் நன்றியோடு நினைவு கூரும்.
ஒன்றியம், இவ்வகையான பொதுப் பணிகளில் உங்களையும் இணைத்துக்கொள்ள பெரும் நம்பிக்கையோடு காத்து நிற்கிறது.
எம்மை பற்றி மேலும் அறிந்துகொள்ள எமது இணையத்தளத்தை பார்வையிடவும்.
எமது நோக்கம்.
அறிவாற்றல் உள்ள தமிழ் மாணவ சமுதாயத்தை உருவாக்குவது.
எமது பணி.
• நோர்வேயில் வசிக்கும் அனைத்து பழைய மாணவர்களையும் ஒன்றுதிரட்டல். அதன்மூலம் தமது பாடசாலை நினைவலைகளை பகிர்ந்துகொள்ள களமமைத்துக் கொடுத்தல்.
• சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் வளர்ச்சிக்கு எம்மால் முடிந்தளவு பங்களிப்பு செய்தல்.
• சாவகச்சேரியை சூழவுள்ள ஏனைய பாடசாலைகட்கு கல்விசார்ந்த, மற்றும் ஏனைய அடிப்படைவசதிகளை அறிந்து, எம்மால் முடிந்த, வருடத்திற்கு ஒருதடவை ஒருபாடசாலை என்ற ரீதியில் உதவுதல்.
அன்றிலிருந்து…
எமது ஒன்றியத்தின் பொதுப்பணிகண்டு, அப்பணிகளுக்கு உறுதுணையாக பழையமாணவர்களோடு இணைந்து பல நலன் விரும்பிகளும் உற்சாகத்தோடு தோள்நிற்கின்றனர். 5ம்,10ம், 15ம் ஆண்டு விழாக்களை காணவந்தோர் பலரும் எமது வெளிப்படையான, நேர்த்தியான, பெறுமதிமிக்க காலத்தையுணர்ந்த எம் செயற்பாடுகள் கண்டு பெருமிதம் அடைந்ததோடு, நிர்வாக ஆளுமை கண்டும் வியந்தனர்.
இதன் ஓர் மைல் கல்லாக 21.04.2019 உதயமான எமது அடுத்த சந்ததியினரின் இளையோர் அமைப்பினரால் தாயகத்தில் செயல்படுத்திய முதல் திட்டம், ஒன்றியத்தின் 15ம் ஆண்டுவிழாவில் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது.
CHAVAKACHCHERI HINDU COLLEGE OLD STUDENT UNION NORWAY
Our Completed Projects
2023 – யா / கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயம் – குடிநீர் சுத்திகரிப்புச் சாதன மீளியக்கம்
குடிநீர் சுத்திகரிப்புச் சாதன மீளியக்கம் யா / கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு ஏற்கனவே இளையோர் அமைப்பினரால் வழங்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்புச் சாதனமானது, மாணவர்களின் குடிநீர்த் தேவையைத் தீர்த்து வந்தது. சில...
2023 – மாணவர்களின் கல்விப் பயன்பாட்டிற்கு- வகுப்பறைத்திருத்தவேலை
தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் யா/ போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு வழங்கும் திட்டத்திற்காக ஒன்றியத்தால் ஒதுக்கப்பட்ட நிதி அப் பாடசாலை கணக்கில் வைப்புச் செய்யபட்டது ....
Our Impact 1999-2020
Stay Connected
Latest News & Events
2024 – G.C.E.(O/L) பெறுபேறுகள்
Vidathathlpalai Kamalasini M.V Jeyarasa Nirusan – 1A,6B,1C,1S Kilinochchi Hindu Colloge. Jeyasri Thivia – 8A,1B Suthakar Isaiyarasan – 7A,1B,1 Kaithady Vikneswara Suthakaran Magelnila –...
2024 – 5 ம் வகுப்பு புலமைப்பரீட்சை பெறுபேறுகள்
Vidathathlpalai Kamalasini M.V 5 ம் வகுப்பு புலமைப்பரீட்சை பெறுபேறுகள் Sivakaran Mirnika 143 புள்ளிகள் வெட்டுப்புள்ளி (139)
2020 க. பொ. த. சாதாரணதரப் பரீச்சை பெறுபேறுகள்.
எமது ஒன்றியத்தின் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தின்” ஊடாக உதவி பெறும் மாணவர்களின் 2020 க. பொ. த. சாதாரணதரப் பரீச்சை பெறுபேறுகள். கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் மாணவர்கள் – ரஞ்சன்குமார்...