கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு சீர்உடை, கல்விக்கு தேவையான உபகரணங்கள் வழங்கியது. இலங்கை ரூபா 44 000.
Author: hinducollege chava (hinducollege chava)
2015 மாணவர்களின் கல்விக்கு பண உதவித்திட்டம்
“தொடரும் பங்களிப்புகள்” Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 3 குடும்பத்தினர் கச்சாய் பகுதியிலுள்ள 4 மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்துவருகின்றனர். மாதம் தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. 120 000 வருடம். இத்திட்டத்திலிருந்த 4 மாணவர்களுக்கான உதவி சென்ற வருடத்துடன் நிறைவடைந்துள்ளது. இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
2015 யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.
தொடரும் பங்களிப்புகள். யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர்களுக்கான வேதனமாக இலங்கை ரூபா 120 000 வருடம் வழங்கப்பட்டது. இத்திட்டம் 01.11.2013 முதல் நடைமுறையில் உள்ளது.
2015 யா / சாவகச்சேரி மகளிர் கல்லூரி.
தென்மராச்சி வலய கல்விப்பணிப்பாளர், மற்றும் மகளிர் கல்லூரியின் வேண்டுகோளுக்கினங்க “யா / சாவகச்சேரி மகளிர் கல்லூரிக்கு” நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. இலங்கை ரூபா 800 000.
2014 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.
“தொடரும் பங்களிப்புகள்” Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினர் கச்சாய் பகுதியிலுள்ள 8 மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்துவருகின்றனர். மாதம் தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. 240 000 வருடம். இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
2014 யா/ மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயம்
யா/ மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயத்திற்கு TOSHIBA E-Studio 2007 நிழற்பட இயந்திரம் திரு. சு. கிருஷ்ணகுமார் (வலயக்கல்வி அதிகாரி) தலமையில் அன்பளிப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா – 155 680
10 வது ஆண்டு விழா
எமது ஒன்றியத்தின் “10 வது ஆண்டு விழா” 24. 10. 2014 வெள்ளி மாலை 18:00 மணி “Engel Paradis Oslo” வில் நடக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
2014 யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.
“தொடரும் பங்களிப்புகள்”. யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர்களுக்கான வேதனமாக இலங்கை ரூபா 120 000 வருடம் வழங்கப்பட்டது. இத்திட்டம் 01.11.2013 முதல் நடைமுறையில் உள்ளது.
2013 – யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.
யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 01.11.2013 முதல் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு உதவியாளர்கள் இரு மாணவர்கள் நியமனம் செய்தனர். கல்லூரியில் உயர்தரபரீட்சை எழுதி பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் இம் மாணவர்களுக்கு அவர்களுடைய எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மாதாந்தம் தலா ஜந்தாயிரம் ரூபா ஊதியமாக வழங்கபடுகின்றது. இத்திட்டத்திற்கு 2011ல் சிற்றுண்டிச்சாலைக்கு வைப்பு செய்யப்பட்ட பணத்திலிருந்து ஊதியம் வழங்கப்பட்டுவருகின்றது. இலங்கை ரூபா 20 000.
“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஆரம்பம்
“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” வறுமை கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தை” 2013 ல் நோர்வே, மற்றும் கனடாவில் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினரின் ஆதரவுடன் கச்சாய் பகுதியிலுள்ள 8 மாணவர்களுடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. திட்டம் உருவானவிதம். 2010 ம் ஆண்டு முதல் நோர்வே, மற்றும் கனடாவில் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட இத்திட்டம், இத்திட்டத்தால் பல மாணவர்கள்...




