Category: Our Projects

Home / Our Projects
2018 யா/கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயம்
Post

2018 யா/கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயம்

எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” – யா/கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்து இத்திட்டத்தை மேலும் விரிபுபடுத்தியுள்ளது. இத்திட்டத்தின்மூலம் 9 மாணவர்களுக்கு aug 2018 முதல், மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கு Norway யிலும் மற்றும் Canada...

2018 வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவு
Post

2018 வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவு

30 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு. சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பழைய மாணவன் வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவாக, நகுலேஸ்வரனின் நோர்வே வாழ் சகோதரர் திரு. வே. சற்குணம் அவர்களால் – நோர்வே – இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடன், நகுலேஸ்வரன் கல்வி பயின்ற சாவகச்சேரி இந்துக்கல்லூரி, மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம், கிளி. கண்டாவளை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் 30 வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை 24 / 5 அன்று சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் அதிபர்...

2017  மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.
Post

2017 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

“தொடரும் பங்களிப்புகள்”  மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம். தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது 1. யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 5 மாணவர்களுக்கு 112 500 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இவர்களில் இருவர் A/L க்கு பின் கல்வியை தொடராதபடியால் உதவி Aug. 2017ல்...

2017 / 2016 – யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.
Post

2017 / 2016 – யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.

காணிக்கொள்வனவு எமது பாடசாலையின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பாடசாலையின் நீண்டநாள் கோரிக்கையான“இலக்கம் 1 கைலாசபிள்ளை வீதி”யில் அமைந்துள்ள காணி ஒன்றியத்தின் முழுமையான பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இக் காணியில் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட ஒரு பெரிய தொகையில் கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றது. காணி பற்றிய விபரம் – காணியின் அளவு 3,3 பரப்பு. ஒரு பரப்பின் கொள்வனவு விலை 13 லட்சம் இலங்கை ரூபா. காணியின் விலை 42 லட்சத்து 80 ஆயிரம் இலங்கை ரூபா....

2016 – மாணவர்களின் கல்விக்கான பண உதவி திட்டம்
Post

2016 – மாணவர்களின் கல்விக்கான பண உதவி திட்டம்

“தொடரும் பங்களிப்புகள்”.  தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு 2500 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது. 1. யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 5 மாணவர்களுக்கு 150 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் 1 மாணவர் இந்த வருடத்திலிருந்து இணைக்கப்பட்டுள்ளார். இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. 2. கிளி/...

2016 யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.
Post

2016 யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.

“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் “கற்றலுக்கு கைகொடுப்போம்” திட்டத்தின் கீழ் உள்ள தாய் தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 இலங்கை ரூபாவை 2016 August முதல் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் 11 மாணவர்களுக்கு  வழங்குவதற்கு ஒன்றியம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. இலங்கை ரூபா 137 500 (5 மாதங்களுக்கு)...

2016 கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம்.
Post

2016 கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம்.

கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு சீர்உடை, கல்விக்கு தேவையான உபகரணங்கள் வழங்கியது. இலங்கை ரூபா 44 000.

2015 மாணவர்களின் கல்விக்கு பண உதவித்திட்டம்
Post

2015 மாணவர்களின் கல்விக்கு பண உதவித்திட்டம்

“தொடரும் பங்களிப்புகள்” Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 3 குடும்பத்தினர் கச்சாய் பகுதியிலுள்ள 4 மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்துவருகின்றனர். மாதம் தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்பட்டது.  120 000 வருடம். இத்திட்டத்திலிருந்த 4 மாணவர்களுக்கான உதவி சென்ற வருடத்துடன் நிறைவடைந்துள்ளது. இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

Post

2015 யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.

தொடரும் பங்களிப்புகள். யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர்களுக்கான வேதனமாக இலங்கை ரூபா 120 000 வருடம் வழங்கப்பட்டது. இத்திட்டம் 01.11.2013 முதல் நடைமுறையில் உள்ளது.

2015 யா / சாவகச்சேரி மகளிர் கல்லூரி.
Post

2015 யா / சாவகச்சேரி மகளிர் கல்லூரி.

தென்மராச்சி வலய கல்விப்பணிப்பாளர், மற்றும் மகளிர் கல்லூரியின் வேண்டுகோளுக்கினங்க “யா / சாவகச்சேரி மகளிர் கல்லூரிக்கு” நுழைவு வாயில் அமைக்கப்பட்டது.  இலங்கை ரூபா 800 000.