வணக்கம்

யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம் – நோர்வே இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

Welcome to Chavakachcheri Hindu College Old Student Union Norway.

 

எமது தாய்ப் பாடசாலையின் நலன்களோடு மட்டும் நின்றுவிடாமல் ஒன்றியத்தின் ஆதரவை நம்பிக்கையோடு எதிர்பாத்து நிற்கும் சூழவுள்ள பாடசாலைகளுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் கல்விசார்ந்த, உதவிகளை தொடர்ச்சியாகவும், அவ்வப்போதும் வழங்கிவருவதன் மூலம் நோர்வேயிலும், புலம்பெயர் தேசங்களிலும், மற்றும் தாயகத்திலும் ஓர் நல்ல அங்கீகாரத்தை பெற்று இன்று ஓர் விருட்சமாக வளர்ந்து திடகாத்திரமாக நிற்கிறது.

குறிப்பாக தமது கல்வியை தொடர்வதற்கு வறுமையே தடையாக உள்ள
மாணவர்களை இனங்கண்டு 2013ம் ஆண்டு முதல் உதவிக்கரம் நீட்டி வருகிறது. ஒன்றியத்தின் இவ் நற்பணிகளுக்கு பக்கபலமாக நிற்கும் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் அணுசரணையாளர்களை
எப்போதும் ஒன்றியம் நன்றியோடு நினைவு கூரும்.

ஒன்றியம், இவ்வகையான பொதுப் பணிகளில் உங்களையும் இணைத்துக்கொள்ள பெரும் நம்பிக்கையோடு காத்து நிற்கிறது.

எம்மை பற்றி மேலும் அறிந்துகொள்ள எமது இணையத்தளத்தை பார்வையிடவும்.

Photo Gallery 

CHAVAKACHCHERI HINDU COLLEGE OLD STUDENT UNION NORWAY

Our Completed Projects

2018 வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவு

30 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு. சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பழைய மாணவன் வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவாக, நகுலேஸ்வரனின் நோர்வே வாழ் சகோதரர் திரு. வே. சற்குணம் அவர்களால்...

2017 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

“தொடரும் பங்களிப்புகள்”  மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம். தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான...

2017 / 2016 – யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.

காணிக்கொள்வனவு எமது பாடசாலையின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பாடசாலையின் நீண்டநாள் கோரிக்கையான“இலக்கம் 1 கைலாசபிள்ளை வீதி”யில் அமைந்துள்ள காணி ஒன்றியத்தின் முழுமையான பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இக்...

2016 – மாணவர்களின் கல்விக்கான பண உதவி திட்டம்

“தொடரும் பங்களிப்புகள்”.  தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம்...

Our Impact 1999-2020

0+ Number of projects
0+ Total projects cost LKR
0+ Schools Received Help
0+ Youth Org. projects
Stay Connected

Latest News & Events

கலைமாலை 2005

எமது ஒன்றியத்தின் “கலைமாலை 2005”  29. 10. 2005 சனி மாலை 18:00 மணி “Grorud Samfunn hus” ல் நடக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஒன்றியத்தின் முதலாவது செயற்திட்டம்

சுவர்ணி நகைமாடம் (Norway) ஆதரவில் யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு நிழற்பட இயந்திரம் (Kopimaskin) அன்பளிப்பு செய்யப்பட்டது. மேலதிக விபரங்களுக்கு “Completed Projects 2004” பார்வையிடவும்