2013 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

2013 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

இலங்கையில் நீடித்த யுத்ததின் காரணமாக தாய் தந்தையரை இழந்த  மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டினுள் தவிக்கின்ற, கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களுக்கும், எமது  ஒன்றியம் தென்மராட்சியில் உள்ள சில பாடசாலைகளின் அதிபர்களின் / நிர்வாகத்தினரின் உதவியுடன் மாணவர்களை தெரிவு செய்து, புலம் பெயர்ந்து வாழும் உதவிமனப்பான்மையுள்ள குடும்பத்தினர்களிடம் / நபர்களிடம்  இந்த மாணவர்களின் கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றோம்.

2013 ம் ஆண்டு முதல் Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினர் 8 மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்துவருகின்றனர். இவர்கள் தங்களின் வசதிகளுக்கு ஏற்பவும், மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்பவும் உதவிகளை செய்துவருவதுடன், அவர்களிற்கிடையிலான தொடர்புகளையும் தாங்களே பேணிவருகின்றனர். மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது. இலங்கை ரூபா 240 000 வருடம்.