தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் யா/ போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு வழங்கும் திட்டத்திற்காக ஒன்றியத்தால் ஒதுக்கப்பட்ட நிதி அப் பாடசாலை கணக்கில் வைப்புச் செய்யபட்டது . இக் காலப்பகுதியில் தான் அரசும் சத்துணவுத்திட்டத்திற்கு உதவ முன்வந்தது.
அதே வேளை எமது நிதியை மீளப்பெறுவதில் பல சிரமங்களும் இருந்தன.இதை உணர்ந்த நாம் அதே பாடசாலையில் பிறதொரு திட்டமான வகுப்பறைத்திருத்தவேலைக்கு பயன்படுத்த அனுமதி வழங்கினோம். அப்பணி பூர்த்தியடைந்துள்ளது.இது போன்ற திட்டம் இப்பாடசாலைக்கு எம்மால் ஏற்கனவே வழங்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் எமது நிதியானது மாணவர்களின் கல்விப் பயன்பாட்டிற்கும் பாடசாலையின் வளர்ச்சிக்கும் உகந்ததாக அமைந்தது மகிழ்ச்சியே . இவ்வாண்டின்
இவற்றிற்குரிய செலவு ரூபா 400 900,- ஐ நிதிப்பங்களிப்பாக வழங்கி, அம்மாணவர்களின் அசௌகரியங்களை நிவர்த்தி செய்துள்ளோம்.
எமது ஒன்றியத்தால் பூர்த்தியான திட்டங்களின் பட்டியலில் இதுவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.