Author: hinducollege chava (hinducollege chava)

Home / hinducollege chava
2016 யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.
Post

2016 யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.

“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் “கற்றலுக்கு கைகொடுப்போம்” திட்டத்தின் கீழ் உள்ள தாய் தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 இலங்கை ரூபாவை 2016 August முதல் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் 11 மாணவர்களுக்கு  வழங்குவதற்கு ஒன்றியம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. இலங்கை ரூபா 137 500 (5 மாதங்களுக்கு)...

2016 கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம்.
Post

2016 கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம்.

கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு சீர்உடை, கல்விக்கு தேவையான உபகரணங்கள் வழங்கியது. இலங்கை ரூபா 44 000.

2015 மாணவர்களின் கல்விக்கு பண உதவித்திட்டம்
Post

2015 மாணவர்களின் கல்விக்கு பண உதவித்திட்டம்

“தொடரும் பங்களிப்புகள்” Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 3 குடும்பத்தினர் கச்சாய் பகுதியிலுள்ள 4 மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்துவருகின்றனர். மாதம் தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்பட்டது.  120 000 வருடம். இத்திட்டத்திலிருந்த 4 மாணவர்களுக்கான உதவி சென்ற வருடத்துடன் நிறைவடைந்துள்ளது. இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

Post

2015 யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.

தொடரும் பங்களிப்புகள். யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர்களுக்கான வேதனமாக இலங்கை ரூபா 120 000 வருடம் வழங்கப்பட்டது. இத்திட்டம் 01.11.2013 முதல் நடைமுறையில் உள்ளது.

2015 யா / சாவகச்சேரி மகளிர் கல்லூரி.
Post

2015 யா / சாவகச்சேரி மகளிர் கல்லூரி.

தென்மராச்சி வலய கல்விப்பணிப்பாளர், மற்றும் மகளிர் கல்லூரியின் வேண்டுகோளுக்கினங்க “யா / சாவகச்சேரி மகளிர் கல்லூரிக்கு” நுழைவு வாயில் அமைக்கப்பட்டது.  இலங்கை ரூபா 800 000.

2014 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.
Post

2014 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

“தொடரும் பங்களிப்புகள்” Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினர் கச்சாய் பகுதியிலுள்ள 8 மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்துவருகின்றனர். மாதம் தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. 240 000 வருடம். இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

2014 யா/ மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயம்
Post

2014 யா/ மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயம்

யா/ மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயத்திற்கு TOSHIBA  E-Studio 2007 நிழற்பட இயந்திரம்  திரு. சு. கிருஷ்ணகுமார் (வலயக்கல்வி அதிகாரி) தலமையில் அன்பளிப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா – 155 680

10 வது ஆண்டு விழா
Post

10 வது ஆண்டு விழா

எமது ஒன்றியத்தின் “10 வது ஆண்டு விழா” 24. 10. 2014 வெள்ளி மாலை 18:00 மணி “Engel Paradis Oslo” வில் நடக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Post

2014 யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.

“தொடரும் பங்களிப்புகள்”. யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர்களுக்கான வேதனமாக இலங்கை ரூபா 120 000 வருடம் வழங்கப்பட்டது. இத்திட்டம் 01.11.2013 முதல் நடைமுறையில் உள்ளது.

Post

2013 – யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.

யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 01.11.2013 முதல் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு உதவியாளர்கள் இரு மாணவர்கள் நியமனம் செய்தனர். கல்லூரியில் உயர்தரபரீட்சை எழுதி பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் இம் மாணவர்களுக்கு அவர்களுடைய எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மாதாந்தம் தலா ஜந்தாயிரம் ரூபா ஊதியமாக வழங்கபடுகின்றது. இத்திட்டத்திற்கு 2011ல் சிற்றுண்டிச்சாலைக்கு வைப்பு செய்யப்பட்ட பணத்திலிருந்து ஊதியம் வழங்கப்பட்டுவருகின்றது.  இலங்கை ரூபா 20 000.